மும்பையில் முதல்முறையாக கடந்த 24 மணி நேரத்தில் யாருக்கும் கொரோனா தொற்று உறுதியாகவில்லை..!

மும்பையில் முதல்முறையாக கடந்த 24 மணி நேரத்தில் யாருக்கும் கொரோனா தொற்று உறுதியாகவில்லை என மாநகராட்சி தகவல். 

கொரோனா தொற்றானது முதன்முதலில் சீனாவில் தான் கண்டறியப்பட்டது. இந்தத் தொற்று சீனாவில் பரவ தொடங்கியதையடுத்து உலக நாடுகள் முழுவதிலும் தனது ஆதிக்கத்தை செலுத்தியது.

மார்ச் 2020 ஆம் ஆண்டு இந்த தொற்று பாதிப்பு தீவிரமாக பரவ தொடங்கிய நிலையில் கோடிக்கணக்கான மக்கள் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டனர். மேலும் லட்சக்கணக்கானோர் உயிரிழந்தும் உள்ளன.

தொற்று பாதிப்பை கட்டுப்படுத்த ஒவ்வொரு நாடுகளிலும்  அந்தந்த நாட்டு அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சமீப காலமாக தொற்று பாதிப்பு குறைந்திருந்தாலும்,  புதிய வகை கொரோனா தொற்று பரவ தொடங்கி உள்ளது. இந்த நிலையில் கொரோனா தொற்று தொடங்கியதில் இருந்து,  முதல் முறையாக மும்பையில் கடந்த 24 மணி நேரத்தில் பூஜ்ஜியம் கொரோனா வழக்குகள் பதிவாகி உள்ளதாக மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Leave a Comment