குஜராத் கலவர கொலை வழக்கில் கைதானவர்கள் விடுதலை ..!

குஜராத் கலவர கொலை வழக்கில் கைதானவர்கள் விடுதலை ..!

குஜராத் கலவரத்தில் கொலைக்குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட அனைவரையும் அம்மாவட்ட நீதிமன்றம் விடுவித்தது.

குஜராத் : 2002 ஆம் ஆண்டு பஞ்சமஹால் மாவட்டத்தின் டெலோல் கிராமத்தில் நடைபெற்ற கலவரத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த 17 பேர் கொல்லப்பட்டனர். இந்த கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 22 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் எதுவும் இல்லாத காரணத்தால் அனைவரையும் அம்மாவட்ட நீதிமன்றம் விடுதலை செய்தது. இவர்களில் 8 பேர் வழக்கு நடைபெற்று கொண்டிருக்கும் போது இறந்ததால் இவர்கள் மீது விசாரணை எதுவும் நடத்தப்படவில்லை.

சாட்சிகளை தேடும் முயற்சியில் ஒரு ஆற்றின் கரையில் இருந்து எலும்புகளை போலீசார் மீட்டனர். ஆனால் அவை இறந்தவர்களின் அடையாளத்தை கண்டறிய முடியாத அளவுக்கு எரிந்து இருந்தது. இந்த வழக்கில் சாட்சியாக இருந்த இறந்தவர்களின் உடல்கள் சாட்சியங்களை அழிக்கும் நோக்கத்துடன் எரிக்கப்பட்டுள்ளது என்று அரசு தரப்பில் குற்றம் சாட்டினர்.

author avatar
செந்தில்குமார்
நான் செந்தில்குமார், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்கிறேன். செய்தி ஊடகத்தின் மீதான ஆர்வத்தினால், ஒரு வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். டெக்னாலஜி, க்ரைம், விளையாட்டு, தமிழ்நாடு முதல் உலக செய்திகள் வரை அனுபவம் உள்ளது.
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *