தமிழக அரசின் சாதனை விளம்பரங்களை எதிர்த்து வழக்கு..!

தமிழக அரசின் சாதனை விளம்பரங்களை எதிர்த்து வழக்கில் தேர்தல் ஆணையம் பதில்தர உத்தரவு.

அதிமுக அரசின் சாதனைகளை பட்டியலிட்டு “வெற்றி நடைபோடும் தமிழகம்” என்ற தலைப்பில் அரசு செலவில் விளம்பரம் வெளியிடுவதாக திமுக , டிராபிக் ராமசாமி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது, அப்போது, நீதிபதிகள் இந்த வழக்கில் தேர்தல் ஆணையம், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிப்ரவரி 18-ம் தேதி முதல் விளம்பரங்கள் நிறுத்தப்படுவதாக தமிழக அரசு விளக்கம் கொடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.  

அரசு பணத்தில் விளம்பரம் தொடர்பான புகார் தேர்தல் ஆணைய பரிசீலனையில் உள்ளதாக தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

author avatar
murugan