கஜா புயல் பாதிப்புகளை வார்த்தைகளால் விவரிக்க முடியாது …! மத்தியக்குழு தலைவர் டேனியல் ரிச்சர்ட்

கஜா புயல் பாதிப்புகளை வார்த்தைகளால் விவரிக்க முடியாது என்று மத்தியக்குழு தலைவர் டேனியல் ரிச்சர்ட் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மத்தியக்குழு தலைவர் டேனியல் ரிச்சர்ட் கூறுகையில், தமிழக அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டுள்ளது.புயலால் பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளையும் பார்வையிடுவது சாத்தியமில்லை அனைவருக்கும் நிவாரணம் கிடைக்க வழிவகை செய்வோம்.கஜா புயல் மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்தியுள்ளது; சீரமைப்பு மேற்கொள்ள நீண்ட காலம் தேவைப்படுகிறது என்றும் மத்தியக்குழு தலைவர் டேனியல் ரிச்சர்ட் தெரிவித்துள்ளார்.

Leave a Comment