#Breaking: தமிழகத்துக்கு ரூ.1928 கோடி ஒதுக்கீடு – மத்திய அரசு

தமிழகத்துக்கு ரூ.1928 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மாநிலங்களுக்கான நிதி பகிர்வின் அடிப்படையில் தமிழகத்துக்கு ரூ.1928 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதில், அதிகபட்சமாக உத்தரப்பிரதேசம் மாநிலத்துக்கு ரூ.8255 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது. மேலும், மாநிலங்களுக்கான மொத்த தொகையாக ரூ.46 ஆயிரம் கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. 

இதனிடையே, இன்று காலை ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்க வேண்டிய தொகையில் தமிழகத்திற்கு ரூ.295 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. 15 வது நிதிக்குழுவின் கோரிக்கையை ஏற்று நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது. அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்துக்கு ரூ.816 கோடியும், பீகாருக்கு ரூ.502 கோடியும், மத்திய பிரதேசத்துக்கு ரூ.330 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று மத்திய அரசு அறிவித்தது. இந்நிலையில் தற்போது, தமிழகத்துக்கு ரூ.1928 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்