#BREAKING : பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குதல் நல்லதல்ல – முதல்வர் மு.க.ஸ்டாலின்

பொதுத்துறை நிறுவன சொத்துக்களை தனியார்மயமாக்குவதை கைவிடக்கோரி மத்திய அரசுக்கு  எழுத்தவுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

பொதுத்துறை நிறுவன சொத்துக்களை இந்திய அரசு தனியாருக்கு விற்பது தொடர்பாக, சட்டப்பேரவையில் காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அவர்கள், கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.

இந்த கவன ஈர்ப்பு தீர்மனத்தின் மீது கருத்து தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், பொதுத்துறை நிறுவனங்கள் நாட்டு மக்களின் சொத்து. பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குவது தேச நலனுக்கு எதிரானது.  பொருளாதார நலனுக்கும், சிறு,குறு தொழிலுக்கும் ஆணிவேராக பொதுத்துறை நிறுவனங்கள் இருப்பதாகவும், பொதுத்துறை நிறுவன சொத்துக்களை தனியார்மயமாக்குவதை கைவிடக்கோரி மத்திய அரசுக்கு  எழுத்தவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அதனை தொடர்ந்து, விழுப்புரத்தில் 1987 ஆம் ஆண்டு இட ஒதுக்கீட்டு போராட்டத்தில் பலியான 21 போராளிகளை பெருமைபடுத்தும் விதமாக விழுப்புரத்தில் 4 கோடி ரூபாயில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.