#BREAKING : ஈபிஎஸ் அதிமுக அலுவலகம் செல்ல ஓபிஎஸ் தரப்பு எதிர்ப்பு…!

எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்களையும் அதிமுக அலுவலகத்திற்குள் செல்ல அனுமதி வழங்கக் கூடாது என்று டிஜிபியிடம் ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி புகார் கடிதம் அனுப்பியுள்ளார். 

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் கடந்த ஜூலை 11-ம் தேதி  ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே கலவரம் ஏற்பட்டது. இந்த கலவரத்திற்கு பின் அதிமுக அலுவலகம் சீல் வைக்கப்பட்டது. ஜூலை 21-ஆம் தேதி சீல் அகற்றப்பட்டு, அதிமுக அலுவலக சாவி ஈபிஎஸ் தரப்பிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த நிலையில், 72 நாட்களுக்கு பின் ஈபிஎஸ் இன்று அதிமுக அலுவலகம் செல்கிறார். இன்னும் சற்று நேரத்தில் ஈபிஎஸ் அதிமுக அலுவலகம் செல்ல உள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி அதிமுக அலுவலகத்தில் அனுமதிக்க கூடாது என்று டிஜிபி அவர்களுக்கு ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி புகார் கடிதம் அனுப்பியுள்ளார்.

சிபிசிஐடி விசாரணை நடைபெற்று வருவதாலும், வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதன் காரணமாகவும்,  எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்களையும் அதிமுக அலுவலகத்திற்குள் செல்ல அனுமதி வழங்கக் கூடாது என்று அந்த புகார் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment