#BREAKING: ஓபிஎஸ் மேல்முறையீடு – நாளை மறுதினம் விசாரணை ..!

கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், அதிமுக கொடி, சின்னம், பெயர் மற்றும் லெட்டர் பேடு ஆகியவற்றை தொடர்ந்து பயன்படுத்தி வந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஓன்று தொடரப்பட்டது.

அந்த மனுவில் கட்சியில் இல்லாத ஒருவர் அதிமுகவின் சின்னத்தை பயன்படுத்துவது சட்டத்திற்கு முரணானது. இது தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துகிறது.  இதனால் ஓபிஎஸ், கட்சி சின்னம், கொடி ஆகியவற்றை பயன்படுத்தக் கூடாது தடை விதிக்க வேண்டும் என கூறியிருந்தார். இந்த வழக்குசென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, அதிமுக பெயர், கொடி, சின்னம் மற்றும் லெட்டர் பேடு போன்றவற்றை பயன்படுத்த ஓ.பன்னீர்ச்செல்வத்துக்கு இடைக்கால தடை விதித்து ஐகோர்ட் நீதிபதி சதீஷ்குமார் உத்தரவிட்டார். இந்நிலையில், அதிமுக பெயர், கட்சியின் கொடி, லெட்டர் பேடு ஆகியவற்றை பயன்படுத்த இடைக்கால தடை விதித்த உயர்நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் இந்த மேல் முறையீடுமனுவை அவரச மனுவாக விசாரிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, நாளை மறுதினம் அவசர வழக்காக விசாரணை எடுத்துக்கொள்ளப்படும் என இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு தெரிவித்துள்ளது.

 

author avatar
murugan