#BREAKING: நளினி வழக்கு – மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி விடுதலை விவகாரத்தில் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் உத்தரவு.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும், நளினி, ரவிச்சந்திரன் தங்களை முன்கூட்டியே விடுவிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தனர். பேரறிவாளனை விடுதலை செய்த உச்சநீதிமன்றம் தீர்ப்பின் அடிப்படையில் தங்களையும் விடுதலை செய்யக் கோரி ரவிச்சந்திரன், நளினி தாக்கல் செய்த மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனையடுத்து, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தனர்.

பேரறிவாளன் விடுதலை தொடர்பான தீர்ப்பின் அம்சங்களை குறிப்பிட்டும், உச்சநீதிமன்றத்தின் அதிகாரத்தை பயன்படுத்தியும் தங்களை விடுதலை செய்ய வேண்டும் என அவர்கள் தாக்கல் செய்திருந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனுக்கள் மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், நளினி விடுதலை விவகாரத்தில் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தங்களை விடுவிக்கக்கோரி நளினி மற்றும் ரவிசந்திரன் தாக்கல் செய்த மேல்முறையீடு மனு உச்சநீதிமன்றம் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிஆர் கவாய், பிவி நாகரத்தினம் அடங்கிய அமர்வு மத்திய அரசு நோட்டிஸ் அனுப்ப உத்தரவிட்டது. நாளின் மேல்முறையீட்டு மனுவுக்கு பதிலளிக்க மத்திய அரசு மற்றும் தமிழக அரசுக்கு ஆணையிட்டு, வழக்கை அக்.10ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி சார்பில் உச்சநீதிமன்றத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் மனு தாக்கல் செய்யப்பட்டது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment