#BREAKING: கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதியானது..!

மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதியானது.

நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து கமல்ஹாசன் தனது ட்விட்டரில் பதிவிட்ட பதிவில், அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின் லேசான இருமல் இருந்தது. பரிசோதனை செய்ததில் கோவிட் தொற்று உறுதியானது. மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். இன்னமும் நோய்ப்பரவல் நீங்கவில்லையென்பதை உணர்ந்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் என பதிவிட்டுள்ளார்.

author avatar
murugan