#Breaking: மருத்துவ ஆக்சிஜன் உற்பத்திக்கு சலுகைகள் – தமிழக அரசு அறிவிப்பு

மருத்துவ ஆக்சிஜன் தேவை அதிகரிப்பால் அதன் உற்பத்திக்கு சிறப்பு சலுகைகளை அறிவித்தது தமிழக அரசு.

மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி செய்ய முன்வரும் நிறுவனங்களுக்கு 30% மூலதனம் மானியம் வழங்கப்படும் என தமிழக அரசு சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது. முன்னுரிமை அடிப்படையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு சிட்கோ, சிப்காட் மூலம் இடம் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும், ஆக்சிஜன் உற்பத்தியாளர்களுக்கு கட்டணம் ஏதுமின்றி ஒன்றை சாளர முறையில் விரைந்து அனுமதி வழங்கப்படும்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்