#Breaking: “ஆளுநர் முடிவெடுக்க காலக்கெடு தேவை” – சபாநாயகர் அப்பாவு வலியுறுத்தல்!

சிம்லா:சட்ட மன்றங்கள் அனுப்பும் கோப்புகள் மீது ஆளுநர் முடிவெடுக்க உரிய காலக்கெடுவை நிர்ணயிக்க வேண்டும் என்று தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

பொதுவாக ஆளுநர்கள் அரசுகள் அனுப்பும் கோப்புகள் மீது எந்தவிதமான முடிவுகளையும் எடுப்பதில்லை.அவ்வாறு எடுத்தாலும்  மிகவும் காலத்தாமதமாக எடுக்கிறார்கள்.இதனால்,மக்களுக்கு பதில் அளிக்க வேண்டிய அரசுகளுக்கு கடுமையான நெருக்கடி ஏற்படுகிறது என்று நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான சட்டமன்றங்கள் குற்றம் சாட்டி வருகின்றன.

இந்நிலையில்,சட்ட மன்றங்கள் அனுப்பும் கோப்புகள் மீது ஆளுநர் முடிவெடுக்க உரிய காலக்கெடுவை நிர்ணயிக்க வேண்டும் என்று தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு வலியுத்தியுள்ளார்.

மேலும்,இது தொடர்பாக அவர் கூறுகையில்:”சட்ட மன்றங்கள் அனுப்பும் கோப்புகள் மீது ஆளுநர் முடிவெடுக்காமல் இருப்பது விவாதத்திற்குரியதாக உள்ளது.எனவே,சட்ட மன்றங்கள் அனுப்பும் கோப்புகள் மீது ஆளுநர் முடிவெடுக்க உரிய காலக்கெடுவை நிர்ணயிக்க வேண்டும், குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்கும் உடனடியாக அதனை அனுப்ப வேண்டும் என்று இமாச்சலப்பிரதேசத்தின்,சிம்லாவில் நடைபெறும் மாநில சட்டப்பேரவை சபநாயக்கர்கள் மாநாட்டில் அப்பாவு இதனை தெரிவித்துள்ளார்.