#BREAKING: பொதுக்குழு ஒப்புதல் அளிக்காததால் பதவிகள் காலாவதி – ஈபிஎஸ் தரப்பு

ஒற்றை தலைமைதான் தேவை என்பது பொதுக்குழு உறுப்பினர்களின் விருப்பம் என ஈபிஎஸ் தரப்பு.

அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓபிஎஸ் மற்றும் வைரமுத்து தொடர்ந்த வழக்கின் விசாரணை இன்று இரண்டாவது நாளாக சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. நீதிபதி ஜெயசந்திரன் முன்பு ஈபிஎஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயணன் வாதாடி வருகிறார். நேற்று ஓபிஎஸ் தரப்பு, வைரமுத்து தரப்பு வாதங்கள் முடிந்த நிலையில், இன்று எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், ஈபிஎஸ் தரப்பு கூறுகையில், ஒருங்கிணைப்பாளர்கள் தேர்தல் நடைமுறைகளுக்கு டிச.2021-ல் நடந்த பொதுக்குழுவில் ஒப்புதல் அளிக்கவில்லை. ஒப்புதல் அளிக்காததால் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவாதியாகின. அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களின் பதவிகள் காலாவாதியாகவில்லை. ஒருங்கிணைப்பாளர்கள் பதவிகள் மட்டுமே காலாவாதியாகிவிட்டன.

இரு பதவிகளும் காலாவதியானதால் அதிமுக நிர்வாகிகள் மூலம் பொதுக்குழு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. பொதுக்குழு உறுப்பினர்களுடைய கோரிக்கையை ஏற்று ஜூலை 11ல் பொதுக்குழு கூட்டப்பட்டது.  நீதிமன்ற உத்தரவால் ஒற்றை தலைமை தீர்மானத்தை டிச.2021-ல் நடந்த பொதுக்குழுவில் நிறைவேற்ற இயலவில்லை. இரட்டை தலைமை தேவையில்லை, ஒற்றை தலைமைதான் தேவை என்பது பொதுக்குழு உறுப்பினர்களின் விருப்பம்.

2432 பொதுக்குழு உறுப்பினர்கள் ஒற்றைத் தலைமையை விரும்புவதாக கடிதம் அளித்துள்ளனர், மற்ற கட்சிகள் குடும்பத்தினரால் நடத்தப்படுகிறது. அதிமுகவில் தான் உள்கட்சி தேர்தல் ஜனநாயகபூர்வமாக நடத்தப்பட்டுள்ளது.எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு பின் கட்சியை வழி நடத்த வேண்டும் என எடப்பாடி பழனிசாமியை முன்னிறுத்தி கட்சியினர் கடிதம் அளித்துள்ளனர்.

எல்லா அரசியல் கட்சிகளும் தேர்தலை நோக்கியே செல்கின்றன, ஒருவரின் விருப்பத்தை பார்க்காமல் மொத்த கட்சியின் நலனை பார்க்க வேண்டும். அதிமுக ஜூன் 11 பொதுக்குழு கூட்டத்துக்கு நோட்டீஸ் தரவில்லை என கூற முடியாது. ஜூன் 23-ஆம் தேதி நடந்த கூட்டத்தில் பொதுக்குழு குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டது. பொதுக்குழு தொடர்பான அறிவிப்பை நோட்டீசை தபால் மூலம் தர வேண்டும் என்று அவசியம் இல்லை என தெரிவித்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக் காலம் 5 ஆண்டுகளாக இருக்கும்போது, ஒரு ஆண்டுக்கு முன்னரே எப்படி பதவிகள் காலாவதியானது? என ஈபிஎஸ் தரப்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment