#Breaking : தமிழகத்தில் மேலும் 102 பேருக்கு கொரோனா.! பாதிப்பு எண்ணிக்கை 411 ஆக உயர்வு.!

சீனா உஹான் நகரில் புதிதாக கண்டறியப்பட்ட கொரோனா என்ற கோவிட் 19 வைரஸ் உலக முழுவதும் சுமார் 170க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முடியாமல் வல்லரசு நாடுகள் திணறி வருகிறது. இதனால் உலக நாடுகள் ஒன்றாக சேர்ந்து கொரோனா வைரஸ் பரவலை எதிர்த்து போராடி வருகின்றனர். இதனிடையே உலகளவில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இதுவரை 10,18,920 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53,292 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இந்த சோகத்திலும் ஒரு சந்தோஷமான நிகழ்வு என்னவென்றால் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் 2,13,525 பேர் குணமடைந்துள்ளார்கள் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த வைரஸ் இந்தியா முழுவதும் தற்போது வேகமாக பரவி வருகிறது. இதனால் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2301 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 56 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 157 பேர் குணமடைந்து வீட்டிற்க்கு திரும்பியுள்ளனர் என்று மத்திய சுகாதாரர்த்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வண்ணம் உள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் இன்று மட்டும் மேலும் 102 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 411 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 7 பேர் குணமடைந்துள்ளார்கள் என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.