#Breaking:547 நாட்களுக்கு பிறகு 1 லட்சத்திற்கும் கீழ் சென்ற கொரோனா சிகிச்சை!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,954  பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இறப்பு எண்ணிக்கை 267 ஆக பதிவாகியுள்ளது.இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,45,72,523 ஆக உள்ளது.

  • கடந்த 24 மணி நேரத்தில் 8,954 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இது நேற்றைய பாதிப்பை விட  1900 அதிகம்.கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 3,45,87,822 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 267 ஆக பதிவாகியுள்ளது. இதுவரை இந்தியாவில் 4,69,247 பேர் உயிரிழந்துள்ளனர்.
  • தொற்றில் இருந்து ஒரே நாளில் 10,207 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,40,28,506 ஆக உயர்ந்துள்ளது.
  • இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 99,023 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
  • நாடு முழுவதும் இதுவரை 1,24,10,86,850 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் 80,98,716 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.