#BREAKING : ஒன்றிய அரசின் இந்த முடிவு பிற்போக்குத்தனமான நடவடிக்கை – பிரதமருக்கு முதல்வர் கடிதம்

உயர்கல்விக்கு நுழைவுத்தேர்வு கொண்டுவரும் ஒன்றிய அரசின் முடிவு பிற்போக்குத்தனமான நடவடிக்கை பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம். 

அனைத்து மத்திய பல்கலைக் கழகங்களுக்கும், பொது பல்கலைகழக நுழைவுத் தேர்வினை கட்டாயமாக்கும் நடவடிக்கையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என பிரதமர் மோடிக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், உயர்கல்விக்கு நுழைவுத்தேர்வு கொண்டுவரும் ஒன்றிய அரசின் முடிவு பிற்போக்குத்தனமான நடவடிக்கை. இந்த நுழைவுத்தேர்வு மாநில பாடத்திட்ட மாணவர்கள் அனைவருக்கும் சமமான வாய்ப்பினை வழங்கிடாது என்றும், உயர்க்களவு நிறுவன சேர்க்கையில் பள்ளி கல்வியின் முக்கியத்துவத்தை ஓரங்கட்ட முயற்சிப்பதாகவும்  குற்றச்சாட்டியுள்ளார். மேலும், ஒன்றிய அரசின் இந்த போக்கு மற்றோரு விரும்பத்தகாத நடவடிக்கை என்றே கருதுகிறோம் என தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.