#Breaking:7 பேர் விடுதலை – தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவு!

சென்னை:ஆளுநர் ஒப்புதலுக்கு காத்திருக்காமல் தன்னை விடுதலை செய்ய கோரி நளினி தொடர்ந்த வழக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை பெற்று வரும் 7 பேர் விடுதலை குறித்த அமைச்சரவை தீர்மானம் தொடர்பாக விளக்கம் தேவை என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஆளுநர் ஒப்புதலுக்கு காத்திருக்காமல் தன்னை விடுதலை செய்ய கோரி நளினி தொடர்ந்த வழக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.தீர்மானத்தின் மீது ஆளுநர் எந்த முடிவும் எடுக்காத நிலையில் எப்படி உத்தரவை பிறப்பிக்க முடியும்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.ஆனால்,அமைச்சரவை தீர்மானத்தை ஆளுநர் 42 நாட்களாக நிலுவையில் வைத்திருப்பது சட்டவிரோதம் என நளினி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து,பேரறிவாளன் விவகாரம் மட்டும் குடியரசு தலைவருக்கு அனுப்பப்பட்டதா? அல்லது ஏழு பேரின் வழக்கும் அனுப்பப்பட்டுள்ளதா? – என நீதிமன்றம் கேள்வி எழுப்பிய நிலையில்,7 பேர் விடுதலை குறித்த அமைச்சரவை தீர்மானம் தொடர்பாக விளக்கம் தேவை என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.