#Breaking:5ஜி அலைக்கற்றை ஏலம் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

இந்தியாவில் விரைவில் 5ஜி சேவை அறிமுகப்படுதப்படவுள்ளது எனவும், இதற்காக இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட 5ஜி சாதனங்களை சோதனை செய்வதற்கான கட்டமைப்பு செயல்பாட்டுக்கு வருகிறது எனவும்,மேலும்,வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் 6ஜி தொழில்நுட்பத்துக்கு மாற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் நரேந்திர மோடி  அண்மையில் அறிவித்திருந்தார்.

பிரதமரை தொடர்ந்து,இந்தியாவில் ஸ்பெக்ட்ரம் ஏலம் விரைவில் நடத்தப்படும் என்றும் இந்தாண்டு இறுதியில் 5ஜி தொலைத்தொடர்பு சேவைகள் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிரிபார்க்கப்படுவதாகவும் நாடாளுமன்ற மாநிலங்களவையில் மத்திய தொலைத் தொடர்புத்துறை இணையமைச்சர் தேவுசின் சவுகான் அண்மையில் அறிவித்திருந்தார்.

இந்நிலையில்,பொது மற்றும் நிறுவனங்களுக்கு 5ஜி அலைக்கற்றை சேவை வழங்குவதற்கான ஸ்பெக்ட்ரம் ஏலத்துக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி,72,097.85 மெகா ஹெர்ட்ஸ் 5ஜி அலைக்கற்றை ஏலத்தை ஜூலைக்குள் முடிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையில்,நாட்டிலேயே முதல்முறையாக சென்னை ஐஐடி கல்லூரியில் இருந்து 5ஜி வீடியோ,ஆடியோ கால் சேவையை மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சோதித்துப் பார்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Comment