குட்நியூஸ்…12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு போனஸ் மதிப்பெண் – அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு!

கடந்த மே 5 ஆம் தேதி முதல் 12 ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வு நடைபெற்று வந்த நிலையில்,மே 28 ஆம் தேதி வரை நடைபெற்ற வேதியியல் பாடத்திற்கான இரு வினா எண்கள் தவறாக இருந்ததாக புகார் எழுந்தது.

இந்நிலையில்,12 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வில் வேதியியல் வினாத்தாளில் இடம்பெற்ற இரு கேள்விகளுக்கு போனஸ் மதிப்பெண் வழங்கப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது.

அதன்படி,பகுதி 1-அ,வினா எண் 9 அல்லது பகுதி 1-ஆ,வினா எண் 5-க்கு விடையளித்திருந்தால் முழு மதிப்பெண்கள் வழங்கப்படும் எனவும், அதைப்போல,பகுதி -2,வினா எண் 29-க்கு மாணவர்கள் விடையளித்திருந்தால் முழுமதிப்பெண் வழங்கப்படும் எனவும் என அரசுத் தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது.

இதனிடையே,தமிழகத்தில் நடைபெற்று வரும் பள்ளி பொதுத் தேர்வுகள் இன்றுடன் நிறைவடைகின்றன.ஏற்கனவே 12,10 ஆம் வகுப்பு தேர்வுகள் நிறைவடைந்த நிலையில் 11 ஆம் வகுப்பு தேர்வுகள் இன்றுடன் நிறைவடைகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment