தனித் தேர்வர்களுக்கான பொதுத்தேர்வு முடிவு – இன்று வெளியீடு!

தனித் தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு இன்று வெளியிடப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு. தமிழகத்தில் தனித் தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு வெளியிடுதல் தொடர்பாக அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, கடந்த மாதம் 10-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை நடைபெற்ற தனித் தேர்வுகளுக்கான எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வினை எழுதிய தனி தேர்வர்கள் இன்று பகல் 12 மணிக்கு www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் … Read more

இன்று முதல்…இந்த மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் – அரசு தேர்வுகள் இயக்ககம் முக்கிய அறிவிப்பு!

10,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் இன்று முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பெறலாம். தமிழகத்தில் 10, 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இரு தினங்களுக்கு முன்னர் வெளியிட்டார்.அதன்படி,தமிழகம்,புதுச்சேரியில் 93.76% மாணவ, மாணவிகள் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சியடைந்தனர்.12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 8,06,277 பேரில் 7,55,998 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்.இதுபோன்று தமிழகம், புதுச்சேரியில் 10-ஆம் வகுப்பில் மொத்தம் 90.7% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர்.10-வகுப்பு பொதுத்தேர்வை 9,12,620 … Read more

குட்நியூஸ்…12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு போனஸ் மதிப்பெண் – அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு!

கடந்த மே 5 ஆம் தேதி முதல் 12 ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வு நடைபெற்று வந்த நிலையில்,மே 28 ஆம் தேதி வரை நடைபெற்ற வேதியியல் பாடத்திற்கான இரு வினா எண்கள் தவறாக இருந்ததாக புகார் எழுந்தது. இந்நிலையில்,12 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வில் வேதியியல் வினாத்தாளில் இடம்பெற்ற இரு கேள்விகளுக்கு போனஸ் மதிப்பெண் வழங்கப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது. அதன்படி,பகுதி 1-அ,வினா எண் 9 அல்லது பகுதி 1-ஆ,வினா எண் 5-க்கு விடையளித்திருந்தால் முழு … Read more

மாணவர்களே…தேர்வுகள் உங்களை மதிப்பிட அல்ல;நம்பிக்கையோடு எதிர்கொள்க – முதல்வர் வாழ்த்து!

தமிழகத்தில் கொரோனா சூழல் காரணமாக 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு 10, 11 & 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முழுமையாக நடைபெறுகிறது. அதன்படி, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நாளை (மே 5-ஆம் தேதி) முதல் தொடங்குகிறது.அதைப்போல்,10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 6 ஆம் தேதியும்,பிளஸ் 1 மாணவர்களுக்கு மே 10 ஆம் தேதியும் தேர்வுகள் தொடங்கவுள்ளன. இந்நிலையில்,பொதுத்தேர்வு எழுதவுள்ள 10-12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் … Read more

#Breaking:நாளை பொதுத்தேர்வு…இந்த நேரத்தில் வந்தால் போதும் – அரசு தேர்வுத்துறை முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் கொரோனா சூழல் காரணமாக 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு 10, 11 & 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முழுமையாக நடைபெறுகிறது. அதன்படி, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நாளை (மே 5-ஆம் தேதி) முதல் தொடங்குகிறது. அதைப்போல்,10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 6 ஆம் தேதியும்,பிளஸ் 1 மாணவர்களுக்கு மே 10 ஆம் தேதியும் தேர்வுகள் தொடங்கவுள்ளன. தமிழகம் முழுவதும் பொதுத்தேர்வுகள் சுமார் 3,119 மையங்களில் நடைபெறுகிறது என ஏற்கனவே தேர்வுத்துறை … Read more

ரெடியா…10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் ஹால் டிக்கெட்!

தமிழகத்தில் 10 ஆம் வகுப்பிற்கு மே 6 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரையும்,11 ஆம் வகுப்பிற்கு மே 9 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரையிலும்,12 ஆம் வகுப்பிற்கு மே 5 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரையிலும் பொதுத்தேர்வு நடைபெறவுள்ளது. இந்நிலையில்,தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதும் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்கள் இன்று பிற்பகல் இரண்டு மணி முதல் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று … Read more

10-ஆம் வகுப்பு துணைத்தேர்வு – மறுகூட்டல் முடிவு வெளியீடு!

2021 செப்டம்பரில் நடந்து முடிந்த 10-ஆம் வகுப்பு துணைத்தேர்வுக்கான மறுகூட்டல் முடிவுகள் வெளியிடுபட்டுள்ளது. 2021 ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்து முடிந்த 10-ஆம் வகுப்பு துணைத்தேர்வில் மறுகூட்டலுக்காக விண்ணப்பித்தவர்களில் மதிப்பெண் மாற்றம் குறித்த பட்டியல் அரசு தேர்வுகள் இயக்ககத்தின் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பட்டியலில் இடம்பெறாத தேர்வர்களுக்கு விடைத்தாள்களின் மதிப்பெண்களில் மாற்றம் இல்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

10-ஆம் வகுப்பு துணைத்தேர்வு – மதிப்பெண் மாற்றம் குறித்த பட்டியல் நாளை வெளியீடு!

மறுகூட்டலுக்காக விண்ணப்பித்தவர்களில் மதிப்பெண் மாற்றம் பட்டியல் நாளை வெளியிடப்படும் என அறிவிப்பு. கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற 10-ஆம் வகுப்பு துணைத்தேர்வில் மறுகூட்டலுக்காக விண்ணப்பித்தவர்களில் மதிப்பெண் மாற்றம் குறித்த பட்டியல் நாளை பிற்பகல் 2 மணிக்கு அரசு தேர்வுகள் இயக்ககத்தின் இணையதளத்தில் வெளியிடப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.