“தோழர்” என்ற வார்த்தையை நீக்கினால்தான் என் படத்திற்கு தேசிய விருது கிடைக்குமென்றால் அந்த விருது தேவையில்லை:இயக்குனர் ராஜீவ் முருகன்

தேசிய விருது பெற, மாநில மொழிப் படங்களை அனுப்பும்போது ஆங்கலத்தில்
சப்-டைட்டில் பதிவுடன் அனுப்ப வேண்டும். ஜோக்கர் படத்தில் கடைசியில் “தோழர்” என்று ஒரு வார்த்தை வரும்.தேர்வுக்குழுவினரிடமிருந்து ஒரு நம்பகமான தகவல் கிடைத்தது.ஜோக்கர் படம் தேசிய விருது பெறத் தகுதி பெற்றிருக்கிறது.ஆனால் “காம்ரேட்” என்னும் சொல், கம்யூனிஸ்டுகளை குறிக்கிறது.இந்த சொல்லை தேர்வுக்குழுவினர் ஆட்சேபிக்கின்றனர்.
இந்தச் சொல்லை நீக்கிவிட்டு “நண்பர்” என்னும் சொல்லைப் பயன்படுத்தலாம் என்பதுதான் அது…
நான் உறுதியாக தெரிவித்துவிட்டேன் “தோழர்” என்ற வார்த்தையை நீக்கினால்தான் என் படத்திற்கு தேசிய விருது கினைக்குமென்றால் அந்த விருது தேவையில்லை என்றும் ஆனாலும் பெரிய சர்ச்சைக்கு இடையே ஜோக்கர் படத்திற்கு தேசிய விருது கிடைத்து விட்டது என்றும் தமுஎகசவின் வெள்ளிவிழா கலை இலக்கிய இரவில் கலந்துகொண்ட
இயக்குநர் ராஜிவ் முருகன் குறிப்பிட்டார்…!!
author avatar
Castro Murugan

Leave a Comment