ஒரு நாளைக்கு நீங்கள் எத்தனை புஷ் அப் பயிற்சி செய்யலாம் என்று தெரியுமா?

புஷ் அப் உடற்பயிற்சி செய்வது மிகவும் ஆரோக்கியமானதாகும். இதனை செய்வதால் உடல் மிகவும் வலிமையாகிறது. தினசரி வேலைகளை செய்வதற்கு தேவையான சத்துக்கள் கிடைக்கின்றன. உடலை திடமாகவும், தொப்பை இல்லாமலும் வைத்துக்கொள்ள இந்த உடற்பயிற்சி உதவுகிறது.

ஒருநாளைக்கு இத்தனை புஷ் அப் தான் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. இது ஒருவரின் உடல் வலிமை மற்றும் சக்தி சார்ந்தது. ஒரு ஆரோக்கியமான 25 வயது ஆண் 39 புஷ் செய்யலாம். அதே நபரால் தினசரி இதனை செய்யும் போது 54 அல்லது அதற்கு மேல் கூட செய்ய முடியும். 50 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் 21 புஷ் அப் செய்வது நல்லது.
இந்த பயிற்சியால் உங்களது மார்பு பகுதி மற்றும் தோள் பகுதியை மேம்படுத்த விரும்பினால் இந்த புஷ் அப் உடற்பயிற்சி மிகவும் உதவியானதாக இருக்கும். உடனடியாக இதில் பலன் காண முடியாது. நீங்கள் தினசரி இந்த உடற்பயிற்சியை செய்து வந்தால் கட்டாயம் நல்ல பலன் கிடைக்கும்.

Leave a Comment