மல்லிகைப் பூவில் உள்ள மகிமைகள்..!

மல்லிகைப் பூக்களை நிழலில் வைத்து உலர்த்தி, அவற்றை பொடியாக்கி தண்ணீரில் கலந்து குடித்து வர சிறுநீரக கற்கள் தானாகவே கரைந்து போகும்.

வயிற்றில் புண் இருந்தால் வாய்ப்புண் ஏற்படும். இதனை சரிசெய்ய மல்லிகைப் பூவை தண்ணீரில் கொதிக்க வைத்து அது பாதியான பிறகு வடிகட்டி அதனை காலை மாலை என இரு வேளை அருந்தி வர வாய்ப்புண், வயிற்றுப் புண் நீங்கும்.
நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்கள் மல்லிகைப் பூக்கள் ஒன்றிரண்டை  சாப்பிட்டு வர  நோய் எதிர்ப்புச் சக்தி உயரும். 
சுளுக்குப் பிடித்து வீக்கம் காணப்பட்டாலும், நாள்பட்ட வீக்கமாக இருந்தாலும், மல்லிகைப் பூவை அரைத்துப் பூசினால் வீக்கம் குறையும். 
உடலில் மல்லிகைப் பூ எண்ணெயை மசாஜ் செய்யலாம். உடல்வலி நீங்குவதோடு, குளிர்ச்சி அடையும்.
மன அழுத்தம், உடல் சூடு போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட பெண்கள், மல்லிகைப் பூவை வாங்கி தலையில் வைத்தால் மன அழுத்தமும் குறையும், உடல் சூடும் மாறும்.
author avatar
Dinasuvadu desk

Leave a Comment