அகமது படேலுக்கு நான் ஓட்டுப்போடவில்லை: சங்கர் சிங் வகேலா

ஆமதாபாத்: ராஜ்யசபா தேர்தலில் தோற்க போகும் அகமது படேலுக்கு ஓட்டு போடவில்லை என காங்கிரசிலிருந்து விலகிய சங்கர் சிங் வகேலா கூறியுள்ளார்.நெருக்கடி:குஜராத் மாநிலத்தில் காலியாகும் 3 ராஜ்யசபா எம்.பி., பதவிகளுக்கு இன்று தேர்தல் நடந்தது. இதில், பா.ஜ., தலைவர் அமித் ஷா, மத்திய அமைச்சர் ஸ்மிருது இரானி, ராஜ்புத் ஆகியோரும், காங்கிரஸ் தலைவர் சோனியாவின் அரசியல் ஆலோசகர் அகமது படேல் ஆகியோர் போட்டியிடுகின்றனர். காங்கிரசுக்கு பின்னடைவு ஏற்படும் வகையில், அக்கட்சியிலிருந்து 6 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். இதனால், அதிர்ச்சியடைந்த அக்கட்சி, 44 எம்.எல்.ஏ.,க்களை பெங்களூரு அழைத்து வந்து ரிசார்ட்டில் தங்க வைத்திருந்தது. தோல்வி உறுதி:இந்நிலையில், இன்று தனது ஓட்டை பதிவு செய்த பின்னர் காங்கிரசிலிருந்து விலகிய சங்கர் சிங் வகேலா அளித்த பேட்டி: தோற்க போகும் வேட்பாளருக்கு யார் ஓட்டு போடுவார்கள். நான் அகமது படேலுக்கு ஓட்டுப்போடவில்லை. அவருக்கு 40 ஓட்டுகள் கூட கிடைக்காது. அவர் வெற்றி பெற வாய்ப்பு பெறவில்லை.

காங்கிரசில் இருக்கும் எம்.எல்.ஏ.,க்கள் கூட அவருக்கு ஓட்டு போட மாட்டார்கள். படேல் சமுதாயத்தினரை வைத்து காங்கிரஸ் விளையாட கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.நம்பிக்கைஅகமது படேல் கூறுகையில், வெற்றி உறுதி என்பதில் எனக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் நம்பிக்கை உள்ளது. முடிவு வரும் வரை பொறுத்திருங்கள்இவ்வாறு அவர் கூறினார்.

author avatar
Castro Murugan

Leave a Comment