ஜெயலலிதா மணல் சிற்பம் தொடர்பான வழக்கு: ஆகஸ்ட் 28ம் தேதிக்கு ஒத்திவைப்பு

மதுரை: ஜெயலலிதாவின் மணல் சிற்பத்தை அகற்றக் கோரிய வழக்கில் கன்னியாகுமரி ஆட்சியர் அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளார். வடசேரியில் அமைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் மணல் சிற்பத்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக வழக்கு தொடரப்பட்டது. 2016ம் ஆண்டு அமைக்கப்பட்ட சிலையை அகற்றக் கோரிய நாகர்கோவிலைச் சேர்ந்த மகேஷ் தொடர்ந்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வழக்கு மீதான விசாரணையை ஆகஸ்ட் 28ம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.

Leave a Comment