பனங்கிழங்கை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

அன்னைத் தமிழ் சித்தர்கள் கற்பக விருட்சம் என்று போற்றிய அற்புத மர வகைகளில் “பனை மரமும்” ஒன்று. கற்பக விருட்சம் என்றால், அந்த விருட்சம், அதாவது மரத்தின் அனைத்து பகுதிகளுமே மனித குலத்துக்கு அதிகம் பயன் தரக் கூடியது. அதை குறிப்பிட்ட கால அளவில், சித்தர்கள் சொன்ன முறையில் சாப்பிட்டு வர, உடல் காய கற்பமாகும், உடல், நோய்கள் நீங்கி, மனிதன் நெடுநாள் ஆரோக்கியமாக வாழ வழி வகுக்கும். அத்தகைய ஒரு கற்ப மரம்தான் “பனை மரம்”.
பனை மரம் நம்முடைய மனித குலத்துக்கு இறைவனின் அருட் பிரசாதம் என்றால் அது மிகையில்லை. தன்னுடைய, இலை  விசிறி செய்யப் பயன்படும், குடிசைகளில் மேற் கூரையாக , பனை வேர், நுங்கு  ஏழைகளின் இளநீர் , பதநீர்  உடல் சூட்டை போக்கி குளிர்ச்சி தந்து எண்ணற்ற பயன்களை உடலுக்கு வழங்கக் கூடிய நோய் எதிர்ப்பு சக்தி ஊட்டச்சத்து பானம்.
பத நீரிலிருந்து காய்ச்சி செய்யப் படும் கருப்பட்டி  அநேக சித்த மருந்துகளில், பெண்கள் மகப்பேறு கால இலேகிய வகை மருந்துகளில், உடல் தாதுச் சத்து வளர்ச்சிக்காக, கருப்பட்டி கலக்கப்படுகிறது. 
பன விதைக் கூடு  தேங்காய் ஓடு போன்ற இந்த கூட்டின் சரி பாதியாக்கப்பட்ட ஒரு பாதி தான் பாத்திரங்களில் எண்ணை எடுக்கப் பயன் படும் சிரட்டையாகவும், மற்றும் சிறந்த கைவினைப் பொருட்களாகவும் உருவாகிறது. மற்றும் மருத்துவ குணம் உள்ள பனம் பழம்.
இந்த வரிசையில் பனை மரம் நமக்கு அளிக்கும் மற்றொரு நன்மை பயக்கும் உணவு தான் பனங் கிழங்கு.
ஒரு சிறு பனை மரம் தான் இந்த பனங்கிழங்கு என்றால் ஆச்சரியம்தானே, அதுவே உண்மை. பனை மரத்தில் உள்ள நுங்கு மூன்று விதைகளை கொண்டிருக்கும்.  இளசாக இருக்கும் போது அதை சாப்பிடலாம். ஆனால் முற்றிப் போனால் சாப்பிட முடியாது.
இந்த முற்றிய நுங்குகளை மண்ணில் புதைத்துவிட்டால், கொஞ்ச நாட்களில் முளை விட்டு பனை மரமாக வளர ஆரம்பித்துவிடும்.  அப்படி முளைவிட்ட உடனே தோண்டிப் பார்த்தால், நீண்ட குச்சி போல காணப்படுவதுதான் பனங்கிழங்கு.  அதை பிடுங்கி வந்து, வேகவைத்து சாப்பிடுவர்.

பனங்கிழங்கின் நன்மைகள் :

சோளத்தில் உள்ளது போல நார்கள் நிறைய காணப்படும். நார்ச்சத்து அதிகம் உள்ள இந்த கிழங்கில், ஒரு பெரிய பனைமரத்தின் நற்த் தன்மைகளே அதிகம் உள்ளதால், இதைச் சாப்பிட்டால் நமக்கு நல்ல பலம் கிடைத்துவிடுகின்றது.
உடல் இளைத்தவர்கள் கூட பனங்கிழங்கு சாப்பிட்டு வந்தால், ஆரோக்கியமான உடல் பருமன் பெற்று பொலிவுடன் திகழ்வார்கள். உடலுக்கு குளிர்ச்சித் தன்மை அளிக்கும், மலச் சிக்கலை போக்கக் கூடியது. நாம் நீரில் சேர்க்கும் உப்பைப் பொறுத்து இந்த கிழங்கின் ருசி இருக்கும்..
author avatar
Castro Murugan

Leave a Comment