பாகிஸ்தானுக்கு ஆப்பு வைக்கும் அமெரிக்கா….!

பாகிஸ்தானுக்கு ஆப்பு வைக்கும் அமெரிக்கா….!

Default Image

வாஷிங்டன்: பாகிஸ்தானுக்கு வழங்க வேண்டிய 350 மில்லியன் டாலர் ராணுவ நிதியை அமெரிக்கா நிறுத்தி வைத்துள்ளது.அமெரிக்க பார்லிமென்டில் பாதுகாப்பு அமைச்சர் ஜேம்ஸ் மாட்டீஸ், ஹக்கானி பயங்கரவாத அமைப்புக்கு எதிராக பாகிஸ்தான் கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளது என உறுதியாக கூற முடியாது எனக்கூறினார். இதனையடுத்து அந்நாட்டிற்கு வழங்க வேண்டிய நிதியை நிறுத்தி வைக்க அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் முடிவு செய்துள்ளது. கடந்த வருடமும் பாகிஸ்தானுக்கு வழங்க வேண்டிய 300 மில்லியன் டாலர் நிதியை பென்டகன் நிறுத்தி வைத்திருந்தது.

கடந்த காலங்களில் அமெரிக்கா பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருந்து வந்தது குறுப்பிடத்தக்கது.பாகிஸ்தான் அரசு சமீபகாலமாக தீவிரவாதத்தை ஒடுக்க எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.அதனால் தான் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது அமெரிக்கா. 

Join our channel google news Youtube