யார் இந்த ஜெயந்த்படேல்..? இவர் ஏன் தனது நீதிபதி பதவியை ராஜினாமா செய்தார்…! அரசியல் அதிர்ச்சி ரிப்போர்ட்…

இவர் பெயர் ஜெயந்த்படேல்.இவர் தற்போது கர்நாடக ஹைகோர்ட்டில் இரண்டாம் இடத்தில் உள்ள சீனியர் நீதிபதி. தலைமை நீதிபதி அக்டோபர்-9-ல் ஓய்வு பெற போகிறார். அடுத்து இவர் தான் கர்நாடக தலைமை நீதிபதி. திரு.படேல் அவர்கள் பணி ஓய்வுக்கும் பத்தே மாதங்கள் தான் உள்ளது.
இந்நிலையில் இவரை அலகாபாத் ஹைகோர்ட்-க்கு மாற்ற உத்தரவுகள் வருகிறது. அங்கு அவர் மூன்றாவது இடத்தில் பணியாற்ற வேண்டும். இவர் எந்த ஹைகோர்ட்டிலும் தலைமை நீதிபதி ஆக கூடாது என மோடி அரசு இருக்கிறது.
இவர் குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர். அந்த மாநில பொறுப்பு தலைமை நீதிபதியாக (Acting Chief Justice)பணியாற்றி வந்தார். ஆனால் அவர் தலைமை நீதிபதி ஆகவேண்டிய நேரத்தில் கர்நாடகா ஹைகோர்ட்டுக்கு மாற்றி விட்டனர். இதற்கு பிறகும் இந்த வேட்டை தொடர்கிறது. ஏன்?
மோடி குஜராத் மாநிலத்தில் முதல்வராக இருந்த போது முஸ்லிம் சிறுபான்மை மக்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலை(pogram) உலகம் அறிந்ததே.
இஷ்ரத் ஜஹான் எனும் 19-வயது இளம் முஸ்லிம் பெண்ணையும் அவரது நண்பரையும் காவல்துறை அதிகாரிகளே “சாதாரண ஆட்கள்”வேடமிட்டு கொலை செய்தனர். இது ” Ishrat Jahan Fake encounter case”- இந்திய குற்றவியல் சரித்திரத்தில் கறைபடிந்த பிரபல வழக்காகும்.
நீதிபதி ஜெயந்த் படேல் தான் இந்த வழக்கை CBI-க்கு மாற்ற உத்தரவு போட்டவர். மோடியின் மதவெறி முகவிலாசத்தை உலகுக்கே பறைசாற்றியது இவரது தீர்ப்புகள்.
அன்றிலிருந்து இவரை ஆர்எஸ்எஸ்-ம்,மோடியும் துரத்தி கொண்டே இருக்கின்றனர்.நேற்று ஜெயந்த் படேல் ராஜினாமா செய்து விட்டார்.
இவருக்கு ஆதரவாக கர்நாடகா மற்றும் குஜராத் ஹைகோர்ட்டுகளின் வழக்கறிஞர்கள் இன்று நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
author avatar
Dinasuvadu desk

Leave a Comment