ஜாதி மறுப்பு திருமணம் செய்த மாணவர்களை பழிவாங்கும் கோவை பொறியியல் கல்லூரி நிர்வாகம்… மாணவர்கள் கலெக்டரிடம் மனு…!

கோவையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சாதி-மத மறுப்புத் திருமணம் செய்த காதல் தம்பதிகள் சுதேஷ்-சாந்தினி மெகபூப் ஜான் ஆகியோர் கோவை குரும்பப் பாளையத்திலுள்ள ஆதித்யா கல்லூரியில் B.E (EEE) மூன்றாமாண்டு படித்து வருகிறார்கள். , இருவரும் பல்கலைக் கழக அளவில் முதன்மை மதிப்பெண் பெற்றவர்கள். இவர்கள் காதல் திருமணம் செய்துள்ளதை இவ்விருவின் பெற்றோர்கள் ஏற்றுக் கொண்ட நிலையில் ஆதித்யா கல்லூரி நிர்வாகம் இவ்விருவரையும் காலவரையின்றி இடைநீக்கம் செய்துள்ளது!!! இவ்விருவரும்-இவர்களது பெற்றோரும் விளக்கம் கேட்டதற்கு மிரட்டி அனுப்பிய நிர்வாகம்…, மூன்றாண்டு மற்றும் இவர்கள் கல்லூரி படிப்பை முடிக்கும் வரையிலான கட்டணத்தை உடனே செலுத்த வேண்டும் எனவும் – அவ்வாறு செலுத்தினாலும் இவர்களை கல்லூரிக்குள் அனுமதிக்க மாட்டோம் என்றும் – தேர்வினில் மட்டும் கலந்து கொள்ளலாமெனவும் கட்டளையிட்டு மிரட்டியுள்ளது!!! மேலும் ஏதாவது சட்ட நடவடிக்கைக்கு சென்றால் விளைவுகள் விபரீதமாக இருக்குமென்றும் அவர்களை ஆதித்யா கல்லூரி நிர்வாகம் மிரட்டியுள்ளது., இவ்விருவரும் செய்வதறியாதின்றி நமது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கோவை நாடாளுமன்றத் தொகுதித் துணைச் செயலாளர் சந்திரசேகர் அவர்களிடம் முறையிட்டனர்.. உடனே அவர் உட்பட, செய்தி தொடர்பு மையத்தின் மாவட்ட அமைப்பாளர் கோவை ராசா, முன்னாள் மாநகரத் துணைச் செயலாளர் சந்தோஷ் மருது, தொண்டரணியின் மாவட்ட அமைப்பாளர் பாலகிருட்டிணன் ஆகியோர் சுதேஷ்-சாந்தினி மெகபூப் ஜான் ஆகியோரை அழைத்துக் கொண்டு மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு மனு அளிக்கச் சென்றோம்…

காலத் தாமதத்தால் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் இல்லாத காரணத்தால் அவரது இல்லத்தில் உள்ள அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் உயர்திரு .ஹரிகரன் அவர்களை சந்தித்து முறையிட்டார்கள், உடனே அவர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவர்கள் முன்னிலையில் பேசினார்., இது தொடர்பாக நாளை உடனடியாக நடவடிக்கை மேற்கொள்வதாகவும் அவர்களுக்கு உறுதியளித்துள்ளார்… காதல் தம்பதிகளுக்கு நியாயமான நீதி கிடைக்கும் வரை நாங்கள் விடமாட்டோம் எனவும்- அடுத்தகட்டமாக மாணவர்களைத் திரட்டிப் போராட்டக் களத்தில் போராடுவோமெனவும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்…

Leave a Comment