பாஜக மூத்த தலைவர் இல.கணேசனுக்கு கொரோனா தொற்று உறுதி.!

பாஜக மூத்த தலைவரான இல.கணேசனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு வருகிறது. மக்கள் மட்டுமின்றி அரசியல் தலைவர்களும் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில், பாஜக மூத்த தலைவரான இல.கணேசனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு லேசான அறிகுறிகள் மட்டுமே இருப்பதாகவும் தற்போது, நல்ல உடல்நலத்துடன் இருப்பதாகவும் முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கு முன் தமிழகத்தில் அதிமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், திமுக எம்எல்ஏக்கள் என்று பலர் வரிசையாக கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டனர். கொரோனா காரணமாக பாதிக்கப்பட்ட திமுக எம்எல்ஏ ஜெ அன்பழகன், காங்கிரஸ் எம்பி வசந்த குமார் மரணம் உயிரிழந்துள்ளனர் என்பதும் குறிப்பிடப்படுகிறது. தமிழகத்தில் இப்படி அடுத்தடுத்து அரசியல் தலைவர்கள் கொரோனா காரணமாக பாதிக்கப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்