சிவகார்த்திகேயன் அடுத்த படத்திற்கு வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா..?

சிவகார்த்திகேயன் அடுத்த படத்திற்காக வாங்கும் சம்பளம் பற்றி தகவல்கள் வெளியாகியுள்ளது.

சிவக்கார்த்திகேயன், தமிழ் சினிமாவின் பிரபல முன்னணி நடிகராக திகழ்பவர். இவர் கடைசியாக மித்ரன் சரவணன் இயக்கத்தில் ஹீரோ படத்தில் நடித்தார். தற்போது இவர் இரண்டு படங்களில் நடித்து வருகிறார். ‘இன்று நேற்று நாளை ‘ படத்தை இயக்கிய ரவிக்குமாரின் ‘அயலான்’ படத்திலும், கோலமாவு கோகிலா என்ற வெற்றி படத்தை இயக்கிய நெல்சனின் ‘டாக்டர்’ படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் காமெடியனாக களமிறங்கிய சிவகார்த்திகேயன் தற்போது கமர்ஷியல் படங்களில் கலக்கி வருகிறார். இந்த நிலையில் இவரது அடுத்த படத்தினை இயக்குவது யார் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் பல இயக்குநர்களின் பெயர்கள் அடிப்பட்டது.

மேலும் தற்போது தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் அடுத்ததாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது மேலும் அந்த படத்திற்காக நடிகர் சிவகார்த்திகேயன் 22 கோடி சம்பளம் வாங்கவுள்ளதாகும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.