பாஜக நிர்வாகிகள் காங்கிரஸ் கட்சிக்கு தாவ திட்டம் – முன்னாள் முதல்வர் எடியூரப்பா

தேர்தல் வெற்றிக்கு மோடி அலை மட்டும் போதாது, அதற்க்கு மாநில தலைவர்களின் செல்வாக்கும் தேவை என முன்னாள் முதல்வர் எடியூரப்பா கூறியுள்ளார். 

கர்நாடகாவில் வரும் 2023-ஆம்  ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மொத்தமுள்ள 224 தொகுதிகளில் பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றிய பாஜக தற்போது ஆட்சியில் உள்ளது.

இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பதாக எடியூரப்பா முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்த நிலையில், புதிய முதல்வராக பசவராஜ் பொம்மை தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், மாநில உயர்மட்ட குழு கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பின் முன்னாள் முதல்வர் எடியூரப்பா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், தேர்தல் வெற்றிக்கு மோடி அலை மட்டும் போதாது, அதற்க்கு மாநில தலைவர்களின் செல்வாக்கும் தேவை என கூறினார்.

மேலும், கூட்டாக  இருப்பதும், பலரை ஒன்றிணைப்பதுமே வெற்றியை தரும். பாஜக நிர்வாகிகள் பலர் காங்கிரஸ் கட்சிக்கு தாவ திட்டம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.