டெல்லியில் இன்று முதல் 3 நாட்களுக்கு பாஜக தேர்தல் குழு கூட்டம்.!

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு டெல்லியில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு பாஜக மத்திய தேர்தல் குழு கூட்டம் நடைபெறுகிறது.

தமிழகம், புதுச்சேரி, மேற்கு வங்கம், அசாம், கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டமன்ற பொதுத்தேர்தல் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, அனைத்து அரசியல் கட்சிகளும் தங்கள் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில், டெல்லியில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு 5ம் தேதி வரை பாஜக மத்திய தேர்தல் குழு கூட்டம் நடைபெறுகிறது. 5 மாநில தேர்தலிகளில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் இறுதி செய்யப்படுகிறது. தமிழக சட்டமன்ற தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெள்ளிக்கிழமை இறுதி செய்யப்படும் என கூறப்படுகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்