பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரியை பின்னுக்கு தள்ளி, முன்னிலையில் மம்தா…!

நந்திகிராம் தொகுதியில் 1417 வாக்குகளை கூடுதலாக பெற்று பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரியை பின்னுக்கு தள்ளிய மம்தா.

மேற்கு வங்க மாநிலத்தில் மொத்தம் உள்ள 294 சட்டமன்ற தொகுதிகளில் 292 தொகுதிகளுக்கு மட்டும் எட்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வரும் நிலையில், மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை தாண்டி முன்னிலை வகித்து வருகிறது.

தற்போது 12:30 நிலவரப்படி திரிணாமுல் காங்கிரஸ் 202 இடங்களிலும், பாஜக 88 இடங்களிலும், மற்றவை 2 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. மேற்குவங்க நந்திகிராம் தொகுதியில் பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரி முன்னிலை பெற்று வந்த நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி தற்போதைய நிலவரப்படி, 1417 வாக்குகளை கூடுதலாக பெற்று பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரியை பின்னுக்கு தள்ளி, முன்னிலையில் உள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.