34.4 C
Chennai
Wednesday, June 16, 2021

அண்ணா அறிவாலயத்தில் திமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்..!

அண்ணா அறிவாலயத்தில் திமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

சமீபத்தில் தமிழகம் கேரளா, மேற்கு வங்கம், அஸ்ஸாம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களிலும் தேர்தல் நடைபெற்றது. அஸ்ஸாமில் 3 கட்டங்களாகவும், மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாகவும், தமிழகம், கேரளா, புதுச்சேரி மாநிலங்களில் தலா ஒரே கட்டமாகவும் வாக்குபதிவு நடைபெற்றது.

இந்நிலையில், இன்று தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் இன்று காலை 8 மணி முதல்  வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து, எண்ணப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் திமுக கூட்டணி 139 தொகுதியிலும், அதிமுக கூட்டணி 92 தொகுதியிலும், அமமுக 2 தொகுதியிலும் , மக்கள் நீதி மய்யம்  ஒரு தொகுதியிலும் முன்னிலையில் உள்ளனர்.

அதிக தொகுதிகளில் திமுக முன்னிலையில் உள்ளதால் சென்னையில் உள்ளஅண்ணா அறிவாலயத்தில் திமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Latest news

Related news