அயோத்தியா மண்டபம் – மிரட்டல் விடுத்த ஒருவர் கைது!

அயோத்தியா மண்டபம் தொடர்பாக சமையல் ஒப்பந்ததாரர் மகேஷ் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது.

அயோத்தியா மண்டபம் விவகாரத்தில் ரூ.100 கோடி மோசடியை அம்பலப்படுத்திய சமூக ஆர்வலர் ரமணிக்கு மிரட்டல் விடுத்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நங்கநல்லூரை சேர்ந்த சமையல் ஒப்பந்ததாரர் மகேஷ் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தது காவல்துறை. மிரட்டல், இரு பிரிவினரின் இடையே பகைமையை உருவாக்கும் வகையில் பேசுதல், ஆபாசமாக பேசுதல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அயோத்தியா மண்டபத்தை அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும் என ரமணி கோரிக்கை விடுத்திருந்தார். கடந்த 1954-ம் ஆண்டு, ஸ்ரீ ராம் சமாஜ் அமைப்பின் மூலம் சென்னை மேற்கு மாம்பலத்தில் அயோத்தியா மண்டபம் கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்