தமிழறிஞர்களுக்கு விருது வழங்கும் விழா – யார் யாருக்கு என்னென்ன விருது..?

சென்னை கலைவாணர் அரங்கில், தமிழறிஞர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு விருதுகளை வழங்கி, உரையாற்றி உள்ளார். அந்த வகையில், இந்த விழாவில் யார் யாருக்கு என்னென்ன விருதுகள் வழங்கப்பட்டுள்ளது என்பது பற்றி பார்ப்போம்.

விருது பெற்றோர் விபரம் :

  • 2022ஆம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது – மு. மீனாட்சி சுந்தரம்
  • 2021ஆம் ஆண்டுக்கான பெருந்தலைவர் காமராஜர் விருது – குமரி ஆனந்தன்
  • திருவள்ளுவர் விருது – மு. மீனாட்சி சுந்தரம்
  • 2021ஆம் ஆண்டுக்கான அண்ணா விருது –  நாஞ்சில் சம்பத்
  • சிங்காலவேலர் விருது – கவிஞர் மதுக்கூர் இராமலிங்கம்
  • இளங்கோவடிகள் விருது – நெல்லை கண்ணன்
  • மறைமலையடிகளார் விருது – சுகி. சிவம்
  • அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் விருது – முனைவர் இரா. சஞ்சிவிராயர்

விருது பெறும் விருதாளர்கள் ஒவ்வொருவருக்கும் விருதுத் தொகையாக இரண்டு லட்சம் ரூபாயும், ஒரு சவரன் தங்கப்பதக்கம், தகுதியுரை வழங்கியும் பொன்னாடை அணிவித்தும் கௌரவிக்கப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.