200 பில்லியன் டாலர் சொத்துகளை இழந்த முதல் நபர் எலான் மஸ்க்! வெளியான தகவல்.!

எலான் மஸ்க் தனது நிகர சொத்து மதிப்பில், 200 பில்லியன் டாலர்களை இழந்த முதல் நபர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். உலகின் மிகப்பெரிய பணக்காரர் என்று அறியப்பட்ட எலான் மஸ்க், தனது மொத்த சொத்து மதிப்பிலிருந்து கிட்டத்தட்ட 200 பில்லியன் டாலர்களை இழந்துள்ளார் என ப்ளூம்பெர்க் தெரிவித்தது. 51 வயதான எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு கடந்த ஆண்டு நவம்பர் 2021இல் 340 பில்லியன் டாலர் அளவுக்கு உயர்ந்தது. மேலும் இந்த மாத தொடக்கத்தில் லூயிஸ் வுட்டன் … Read more

சோவியத் யூனியனின் 42 ஆண்டுகால சாதனையை சமன் செய்த, ஸ்பேஸ்எக்ஸ்.!

ஸ்பேஸ்எக்ஸ் இந்த ஆண்டில் 61 ராக்கெட்களை விண்ணில் செலுத்தி, 42 ஆண்டுகால சோவியத் யூனியன் சாதனையை சமன் செய்துள்ளது. ஸ்பேஸ்எக்ஸ், தனது ஃபால்கன் 9 ராக்கெட் மூலம் இஸ்ரேலிய பூமி-இமேஜிங் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியுள்ளது. இதன் மூலம் 2022 ஆம் ஆண்டு ஸ்பேஸ்எக்ஸ்-ஆல் 61வது ராக்கெட்கள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம், R-7 ராக்கெட் ஏவப்பட்ட 64 முயற்சிகளில் 61இல் விண்ணில் செலுத்தப்பட்டு, 42 ஆண்டுகால சோவியத் யூனியனின் சாதனையை எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் சமன் … Read more

பிரதமர் மோடியின் தாயாரின் மறைவுக்கு, அமெரிக்க அதிபர் பைடன் இரங்கல்.!

பிரதமர் மோடியின் தாயாரின் மறைவுக்கு அமெரிக்க அதிபர் பைடன் இரங்கல் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தாயார் ஹீராபென் மோடி அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக தனது 100ஆவது வயதில் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வந்தனர். அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடியின் மறைவுக்கு தனது இரங்கல் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடியின் இழப்புக்காக, ஜில் மற்றும் நானும் … Read more

குஜராத்தில் சொகுசுப்பேருந்து, கார் மோதிய விபத்து! 9 பேர் பலி.!

குஜராத்தின் அகமதாபாத்-மும்பை நெடுஞ்சாலையில் பேருந்தும், காரும் மோதிய விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். குஜராத்தின் நவ்சாரி மாவட்டத்தில் சொகுசுப் பேருந்து மற்றும் எஸ்யூவி கார் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளாகியது. இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் பலருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது போலீஸார் தெரிவித்தனர். எஸ்பி ருஷிகேஷ் உபாத்யாய் கூறுகையில், அகமதாபாத்-மும்பை நெடுஞ்சாலையில் பேருந்து வல்சாத் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, எஸ்யூவி எதிர் திசையில் வந்தது, எதிர்பாராதவிதமாக நடந்த இந்த விபத்தில் பஸ் டிரைவரும், எஸ்யூவியில் இருந்த … Read more

ரொனால்டோ, 4,400 கோடி ஒப்பந்தத்தில் புதிய கிளப்பில் இணைந்தார்.!

ரொனால்டோ, சவுதி அரேபிய கிளப் அல்-நஸ்ரில் ரூ.4,400 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். போர்ச்சுகல் அணியின் கிறிஸ்டியானோ ரொனால்டோ, தனது முந்தைய கிளப்பான மான்செஸ்டர் கிளப் அணியுடன் ஒப்பந்தத்தை முடித்துக் கொண்ட பிறகு சவுதி அரேபியாவின் அல்-நஸ்ர் கிளப் தங்கள் கிளப் அணியில் இணையுமாறு அவருடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் கசிந்தது. தற்போது அந்த தகவல் அதிகாரபூர்வமாக உறுதி செய்யப்பட்டது. ரொனால்டோ, சவுதி அரேபிய கிளப் அல்-நஸ்ரில் 2025ஆம் ஆண்டு வரையிலாக ரூ.4,400 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இது … Read more

Today Price:பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்

224-ஆவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை.  சர்வதேச சந்தையில் கட்சா எண்ணெய் விலையை பொறுத்து பெட்ரோல், டீசல் விலை எண்ணெய் நிறுவனங்களால் நிர்ணயிக்கப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 7 மாதங்களைக் கடந்தும் எந்தவித மாற்றமும் இல்லாமல்  பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில்  224-ஆவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லாமல், இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.63 க்கும் , டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 க்கும் … Read more

#Gold: தங்கம் விலை உயர்வு! சவரன் 41,000-ஐ கடந்தது.!

சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 அதிகரித்து ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.5,130-க்கு விற்பனை செய்யப்படுகிறது. எந்த அணிகலன்கள் அணிந்தாலும் தங்க அணிகலன்களுக்கு எப்பொழுதும் மவுசு கொஞ்சம் அதிகம் தான். மக்களும் தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்கின்றனர். தங்கத்தின் விலையில் அவ்வப்போது ஏற்ற இறக்கம் காணப்படுவதுண்டு. அந்த வகையில் இன்று தங்கம் விலை அதிகரித்துள்ளது. இன்று சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 அதிகரித்து ஒரு … Read more

ஐசிசி 2022 சிறந்த கிரிக்கெட்டர் விருது! முழு பட்டியல்.!

ஐசிசி, 2022 ஆம் ஆண்டிற்கான சிறந்த கிரிக்கெட்டர் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்ட வீரர்களின் முழு பட்டியலை வெளியிட்டுள்ளது. ஐசிசி ஒவ்வொரு ஆண்டும் சிறந்து விளையாடும் கிரிக்கெட்டரை, கவுரவிக்கும் விதமாக ஒவ்வொரு விதமான போட்டியிலும் விருது வழங்கி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டும் சிறந்து விளையாடிய வீரர்களுக்கு விருது வழங்கப்படுகிறது. அதற்கான பரிந்துரைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இந்திய வீரர்களில் டி-20யில் சூரியகுமார் யாதவ் மற்றும் மகளிர் பிரிவில் ஸ்ம்ரிதி மந்தனா  விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். சர் கார்பீல்ட் … Read more

ரிஷப் பந்தின் தாயாரிடம் நலம் விசாரித்த பிரதமர்.!

விபத்தில் காயமடைந்த ரிஷப் பந்தின் உடல் நலம் குறித்து அவரின் தாயாரிடம் பிரதமர் மோடி நலம் விசாரித்துள்ளார். இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் இன்று அதிகாலை காரில் சென்று கொண்டிருந்த போது நெடுஞ்சாலையில் உள்ள டிவைடரில் கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த ரிஷப் பந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். விபத்தில் படுகாயமடைந்த ரிஷப் பந்த் விரைவில் குணமடைய வேண்டும் என பலரும் அவருக்காக பிரார்த்தித்து வருகின்றனர். இந்த நிலையில் பிரதமர் மோடி, … Read more

உலக செஸ் பிளிட்ஸ் சாம்பியன்ஷிப், வெள்ளி பதக்கம் வென்று இந்திய கிராண்ட்மாஸ்டர் சாதனை.!

2022 மகளிர் உலக பிளிட்ஸ் சாம்பியன்ஷிப்பில், இந்தியாவின் கோனேரு ஹம்பி வெள்ளிப் பதக்கம் வென்றார். இந்திய கிராண்ட்மாஸ்டரான 35 வயது கோனேரு ஹம்பி, 2022 மகளிர் உலக பிளிட்ஸ் சாம்பியன்ஷிப் தொடரில், 17 சுற்றுகளில் 12.5 புள்ளிகளுடன் தனது இறுதிச் சுற்றில் டான் ஸோங்கியை தோற்கடித்து வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார். இதன்மூலம் உலக பிளிட்ஸ் சாம்பியன்ஷிப்பில், வெள்ளிப்பதக்கம் வெல்லும் முதல் இந்திய மகளிர் எனும் பெருமையைப் பெற்றுள்ளார்.