மாணவர்களே தயாரா? 12 ஆம் வகுப்பு பொதுதேர்வுகள் நாளை தொடக்கம்.!

தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு பொதுதேர்வுகள் நாளை மார்ச்-13 ஆம் தேதி தொடங்குகிறது. தமிழ்நாட்டில் நாளை 12 ஆம் வகுப்பு பொதுதேர்வுகள் தொடங்கி, ஏப்ரல் 3 வரை நடைபெறுகிறது. தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச்-13 முதல் ஏப்ரல் 3 வரையிலும், 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 14 முதல் ஏப்ரல் 5, 2023 வரை நடைபெறுகிறது. 8.8 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் இந்த பொதுத் தேர்வினை எழுதிகின்றனர், … Read more

5 மாதங்களுக்குப் பிறகு பூமிக்குத் திரும்பும் நாசாவின் ஸ்பேஸ் எக்ஸ் விண்வெளி வீரர்கள்.!

நாசாவின் ஸ்பேஸ்எக்ஸ் க்ரூ(Crew)-5 வின் 4 விண்வெளி வீரர்கள் 5 மாதங்களுக்கு பிறகு பூமிக்கு திரும்பியுள்ளனர். நாசா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் க்ரூ-5யைச்சேர்ந்த 4 விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில், ஐந்து மாதங்கள் கழித்து பூமிக்கு திரும்பியுள்ளனர். ஜப்பானின் கொய்ச்சி வகாடா, ரஷ்ய விண்வெளி வீராங்கனை அன்னா கிகினா மற்றும் நாசா விண்வெளி வீரர்களான நிக்கோல் மான் மற்றும் ஜோஷ் கசாடா ஆகியோருடன் ஸ்பேஸ்எக்ஸ் காப்ஸ்யூல் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு புறப்பட்டு சென்றது. அமெரிக்க-ரஷ்ய-ஜப்பானிய குழுவினருடன் சென்ற … Read more

உலகின் மிக நீளமான ரயில் நடைமேடை; கர்நாடகாவில் பிரதமர் மோடி திறந்து வைப்பு.!

கர்நாடகாவில் அமைக்கப்பட்டுள்ள உலகின் மிக நீளமான ரயில் நடைமேடையை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். கர்நாடகாவில் உள்ள ஸ்ரீ சித்தரூத்த சுவாமிஜி ஹூப்பள்ளி நிலையத்தில் உள்ள உலகின் மிக நீளமான ரயில் நடைமேடையை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்து நாட்டுக்காக அர்ப்பணித்தார். 1,507 மீட்டர் நீளமுள்ள இந்த நடைமேடை சுமார் 20 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது என பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சாதனை கின்னஸ் உலக … Read more

BGT2023: இந்தியா 91 ரன்கள் முன்னிலை; 4ஆம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா 3/0 ரன் குவிப்பு.!

இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான 4-வது டெஸ்டில் 4-வது நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா 3/0 ரன்கள் குவிப்பு. இந்தியா-ஆஸ்திரேலியா இடையே நடந்து வரும் பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் 4-வது மற்றும் கடைசி போட்டி குஜராத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 480 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக உஸ்மான் கவாஜா 180 ரன்களும், கேமரூன் க்ரீன் 114 ரன்களும் குவித்தனர். இந்தியா தரப்பில் அஸ்வின் 6 … Read more

BGT2023: 4-வது டெஸ்டில் புதிய வரலாறு படைத்த இந்திய அணி.!

இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி புதிய வரலாறு படைத்துள்ளது. இந்தியா-ஆஸ்திரேலியா இடையே நடந்து வரும் பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் 4-வது மற்றும் கடைசி போட்டி குஜராத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 480 ரன்கள் குவித்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் முதல் 6 விக்கெட்களுக்கு பார்ட்னர்ஷிப்பில் 50 ரன்களுக்கு மேல் குவித்து புதிய சாதனை படைத்துள்ளது. … Read more

BGT2023: கோலி, அக்சர் பட்டேல் அதிரடி; முதல் இன்னிங்சில் வலுவான நிலையில் இந்தியா.!

இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான 4-வது டெஸ்டில் முதல் இன்னிங்சில் இந்தியா 571/9 ரன்கள் குவிப்பு. இந்தியா-ஆஸ்திரேலியா இடையே நடந்து வரும் பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் 4-வது மற்றும் கடைசி போட்டி குஜராத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 480 ரன்கள் குவித்தது. தொடக்க வீரராக களமிறங்கி இறுதி வரை அணியின் ஸ்கோரை உயர்த்தி சதமடித்த உஸ்மான் கவாஜா 180 ரன்கள் குவித்தார். அவரைப்போன்றே கேமரூன் … Read more

ஆன்லைன் ரம்மி தடை, நாடாளுமன்றத்தில் விவாதிக்க திமுக நோட்டீஸ்.!

ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிப்பது தொடர்பாக நாடாளுமன்றத்தில் நாளை விவாதிக்கக் கோரி திமுக சார்பில் நோட்டிஸ். ஆன்லைன் விளையாட்டான ரம்மிக்கு தடை விதிக்க கோரி, நாடாளுமன்றத்தில் நாளை நடைபெறவுள்ள அமர்வில் விவாதிக்க திமுக சார்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் விளையாட்டால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அடிமையாகி உள்ளனர். பொழுதுபோக்கிற்காக இந்த விளையாட்டில் ஈடுபடுபவர்கள், காலப்போக்கில் இதற்கு அடிமையாகி விடுகின்றனர். இந்த விளையாட்டால், தங்களது உழைப்பையும், பணத்தையும் இழப்பதோடு, இறுதியில் தங்களது உயிரையே மாய்த்து கொள்கின்றனர். இந்த … Read more

BGT2023: கோலி சதத்துடன் இந்தியா அதிரடி ஆட்டம்; 472/5 ரன்கள் குவிப்பு.!

இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான 4-வது டெஸ்டில் 4-வது நாள் தேநீர் இடைவேளை முடிவில் இந்தியா 472/5 ரன்கள் குவிப்பு. இந்தியா-ஆஸ்திரேலியா இடையே நடந்து வரும் பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் 4-வது மற்றும் கடைசி போட்டி குஜராத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 480 ரன்கள் குவித்தது. தொடக்க வீரராக களமிறங்கி இறுதி வரை அணியின் ஸ்கோரை உயர்த்தி சதமடித்த உஸ்மான் கவாஜா 180 ரன்கள் … Read more

பெங்களூர் – மைசூர் புதிய நெடுஞ்சாலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.!

பெங்களூரு-மைசூரு இடையேயான 118கிமீ தொலைவிலான புதிய நெடுஞ்சாலையை பிரதமர் மோடி, இன்று திறந்து வைத்தார். கர்நாடக மாநிலத்தின் தலைநகரான பெங்களூரில் உள்ள மைசூர் நகரத்தில் பெங்களூர் – மைசூர் வரை 118 கிலோமீட்டர் தொலைவிற்கு புதிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளது. ரூ.8,480 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த புதிய நெடுஞ்சாலை பாரத் மாலா பிரயோஜன திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 6 வழிச்சாலையாக உருவாகியுள்ள இந்த வழித்தடத்தில், பயண நேரம் குறைவாகும் என்று கூறப்படுகிறது. கர்நாடக மாநிலம் மாண்டியாவில் … Read more

வெளிமாநிலத்தவர் குறித்து அவதூறு பேச்சு; சீமான் மீது வழக்குப்பதிவு.!

வெளிமாநிலத்தவர் குறித்து அவதூறு பரப்பும் விதமாக பேசிய குற்றச்சாட்டில் சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் வெளிமாநிலத்தவர் குறித்து வெறுப்புணர்வை தூண்டும் விதமாக பேசிய, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது ஈரோடு கருங்கல்பாளையம் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளிமாநிலத்தவர்கள் குறித்த தவறான வீடியோக்கள் இணையதளத்தில் பரப்பப்பட்டு தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கடந்த மாதம் 13 ஆம் தேதி நடந்த இடைத்தேர்தல் பரப்புரையில் பேசிய சீமான், வடமாநிலத்தவர்கள் மீது … Read more