BGT2023: 4-வது டெஸ்டில் புதிய வரலாறு படைத்த இந்திய அணி.!

இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி புதிய வரலாறு படைத்துள்ளது.

இந்தியா-ஆஸ்திரேலியா இடையே நடந்து வரும் பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் 4-வது மற்றும் கடைசி போட்டி குஜராத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 480 ரன்கள் குவித்தது.

இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் முதல் 6 விக்கெட்களுக்கு பார்ட்னர்ஷிப்பில் 50 ரன்களுக்கு மேல் குவித்து புதிய சாதனை படைத்துள்ளது. முதல் விக்கெட்டுக்கு ரோஹித்-கில் ஜோடி 74 ரன்களும், 2-வது விக்கெட்டுக்கு கில்-புஜாரா ஜோடி 113 ரன்களும், 3-வது விக்கெட்டுக்கு கில்-கோலி ஜோடி 58 ரன்களும், 4-வது விக்கெட்டுக்கு கோலி-ஜடேஜா ஜோடி 64 ரன்களும், 5-வது விக்கெட்டுக்கு கோலி-பரத் ஜோடி 84 ரன்களும், 6-வது விக்கெட்டுக்கு கோலி-அக்சர் பட்டேல் ஜோடி 66 ரன்களும் குவித்தனர்.

டெஸ்ட் கிரிக்கெட்களில் இந்திய அணியில் முதல் 6 விக்கெட்டில் 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் குவிப்பது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
Muthu Kumar

Leave a Comment