5 மாதங்களுக்குப் பிறகு பூமிக்குத் திரும்பும் நாசாவின் ஸ்பேஸ் எக்ஸ் விண்வெளி வீரர்கள்.!

நாசாவின் ஸ்பேஸ்எக்ஸ் க்ரூ(Crew)-5 வின் 4 விண்வெளி வீரர்கள் 5 மாதங்களுக்கு பிறகு பூமிக்கு திரும்பியுள்ளனர்.

நாசா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் க்ரூ-5யைச்சேர்ந்த 4 விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில், ஐந்து மாதங்கள் கழித்து பூமிக்கு திரும்பியுள்ளனர். ஜப்பானின் கொய்ச்சி வகாடா, ரஷ்ய விண்வெளி வீராங்கனை அன்னா கிகினா மற்றும் நாசா விண்வெளி வீரர்களான நிக்கோல் மான் மற்றும் ஜோஷ் கசாடா ஆகியோருடன் ஸ்பேஸ்எக்ஸ் காப்ஸ்யூல் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு புறப்பட்டு சென்றது.

அமெரிக்க-ரஷ்ய-ஜப்பானிய குழுவினருடன் சென்ற ஸ்பேஸ்எக்ஸ் காப்ஸ்யூல், கடந்த அக்டோபர் மாதம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றது, தற்போது தங்கள் பணியை முடித்து கொண்டு 5 மாதங்கள் கழித்து பூமிக்கு திரும்பியுள்ளனர்.

விண்வெளிக்குப்பைகள் அகற்றுவது மற்றும் பூமியின் சுற்றுப்பாதையில் நிறுத்தப்பட்டுள்ள ரஷ்ய காப்ஸ்யூல்களின்  மற்றும் மாற்று விண்வெளிக்கப்பல் ஒன்றை அவசரமாக வழங்குவதையும் சமாளிக்க வேண்டிய விண்வெளிப் பணிகளையும் நிறைவேற்ற வீரர்கள் சர்வதேச விண்வெளி மையத்தில் தங்கியிருந்து நிறைவேற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
Muthu Kumar

Leave a Comment