ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு வழக்கு.! காவல்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு.!

தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் பேரணி குறித்த வழக்கில் காவல்துறை பதில் அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஜனவரி 20ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது. .  கடந்த அக்டோபர் மாதம் 2ஆம் தேதி தமிழகத்தில் 50 இடங்களில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு நடத்த அனுமதி வழங்க வேண்டும் என நீதிமன்றத்தில் அனுமதி கோரப்பட்டு இருந்தது. இதில் 6 இடஙக்ளில் அனுமதி வழங்கப்பட மாட்டாது எனவும், மற்ற இடங்களில் உள்ள அரங்கில் நடத்தவும் அனுமதி அளிக்கப்பட்டது. இந்த நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் ஆர்எஸ்எஸ் … Read more

#Breaking : நாளை 2023இன் முதல் ஜல்லிக்கட்டு போட்டி.! வெளியான சூப்பர் அறிவிப்பு.!

தமிழகத்தில் இந்தாண்டு முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் நாளை நடைபெற உள்ளது.   பொங்கல் தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். அதன் படி தற்போது 2023ன் முதல் ஜல்லிக்கட்டு போட்டி நாளை தமிழகத்தில் நடைபெற உள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் நாளை ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அரசு அனுமதி அளித்துள்ளது. வருடாவருடம் புத்தாண்டை முன்னிட்டு நடைபெறும் இந்த ஊர் ஜல்லிக்கட்டு போட்டி இந்த வருடம் அனுமதி … Read more

கடந்த 2 உலகக்கோப்பையில் இந்திய அணி செய்த மிக பெரிய தவறு இதுதான்.! கம்பீர் குற்றசாட்டு.!

மூத்த வீரர்கள் தொடர்ந்து இந்திய அணிக்காக விளையாடததால், இந்திய கிரிக்கெட் அணி ஓர் உறுதியை உருவாக்கத் தவறியது, அது அணியின் வெற்றி வாய்ப்புகளை வெகுவாக பாதித்தது. – கம்பீர் கருத்து.  இந்திய கிரிக்கெட் அணி கடைசியாக 2013-ல் சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வென்று இருந்தது. அதன் பிறகு, அவர்கள் 2015 மற்றும் 2019 ஆம் ஆண்டு ODI உலகக் கோப்பை, 2014, 2016, 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை, 2017 சாம்பியன்ஸ் … Read more

தனது பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த தூத்துக்குடி எம்.பி கனிமொழி.!

தனது பிறந்தநாளை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து ஆசி பெற்றார் திமுக எம்பி கனிமொழி.  தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக துணை பொதுசெயலாளருமான மு.க.கனிமொழி இன்று தனது 55வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவரது பிறந்தநாளுக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். கனிமொழி, தனது மூத்த சகோதரரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை பெற்றார். இந்த புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

புத்தாண்டில் வெளியான ஷாக்கிங் தகவல்.! இந்தியாவில் அதிகரிக்கும் சுவாசநோய் பிரச்சனைகள்.!

புத்தாண்டில் வெளியான தகவலின் படி, காற்று மாசு காரணமாக சுவாச பிரச்சனையால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையானது 30 சதவீதம் அதிகரித்து உள்ளது. வருடா வருடம் இந்த குளிர்காலத்தில் காற்றில் அதிக மாசு தங்குவதால் காற்று மாசு அதிகரித்து அது மக்களுக்கு சுவாச பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது என மருத்துவ அறிக்கை கூறுகிறது. இருப்பினும் மழைபெய்து காற்று மாசுவை வெகுவாக குறைத்துவிடும். இருந்தாலும், தற்போது காலநிலை மாற்றம் பெற்று வருவதால் இந்த காற்று மாசு வருடந்தோறும் அதிகரித்து வருகிறது என்கிறது மருத்துவ … Read more

டெல்லியை தொடர்ந்து உ.பியில் நடந்த கொடூர சம்பவம்.! டிரக்கில் இழுத்து செல்லப்பட்ட பெண் மரணம்.!

டெல்லியை போலவே உத்திர பிரதேசத்தில் ஒரு பெண் டிரக் வாகனத்தில் சிக்கி சில கிமீ இழுத்துச்செல்லப்பட்டு உயிரிழந்துள்ளார்.  டெல்லியில் புத்தாண்டு அன்று 20 வயது இளம்பெண்ணை காரில் வந்தவர்கள் இடித்து விபத்து ஏற்படுத்தி அந்த பெண் காருக்கு அடியில் சிக்கி, சாலையில் சில கிமீ இழுத்து செல்லப்பட்டு உயிரிழந்தார்.  இந்த சம்பவம் நாட்டில் அதிர்வலையை ஏற்படுத்தியது. தற்போது அதே போன்ற சம்பவம் உத்திர பிரதேசத்தில் பண்டா மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது. அம்மாவட்டத்தில் மாவாய் புசுர்க் எனும் கிராமத்தில் புஷ்பா … Read more

60வது குழந்தைக்கு தந்தையான பாகிஸ்தானியர்.! 4வது திருமணம் செய்ய விருப்பம்.?

பாகிஸ்தான் நாட்டில் சர்தர்ஜன் என்பவர் 60வது முறை தந்தையாகி உள்ளார். அவருக்கு 3 மனைவிகள் உள்ளனர்.  பாகிஸ்தான் நாட்டில் பலுசிஸ்தான் மாகாணத்தின் தலைநகரான குவெட்டாவில் வசிக்கும் சர்தர்ஜன் முகமது கான் என்பவருக்கு நேற்று அறுபதாவது குழந்தை பிறந்ததாக தெரிவித்தார். சர்தர்ஜனுக்கு குழந்தை பெற்றுக்கொள்வதில் ஏக விருப்பமாம். இதுவரை 3 பெண்களை திருமணம் செய்து கொண்டு 59 குழந்தைகளுக்கு தந்தையாகி தற்போது 60வது முறை தந்தையாகி உள்ளார். இன்னும் குழந்தை பெற்றுக்கொள்ள மேலும் ஒரு பெண்ணை திருமணம் செய்ய … Read more

தஞ்சையில் பைக் வாங்கி தராததால் இளைஞர் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை.!

தஞ்சாவூரில் பைக் வாங்கி தரவில்லை என 22 வயது இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துள்ளார். தஞ்சாவூரில், நந்தகுமார் எனும் 22வயது இளைஞர் ஒருவர் தனக்கு யுனிகார்ன் பைக் வீட்டில் வாங்கி தர மறுக்கிறார்கள் என எலி பேஸ்ட் எனும் எலி மருந்தை சாப்பிட்டுள்ளார். உயிருக்கு போராடிய நந்தகுமாரை தஞ்சை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக குடும்பத்தினர் சேர்த்துள்ளனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி நந்தகுமார் உயிரிழந்துவிட்டார்.    

இடஒதுக்கீடு இல்லாமல் உ.பி உள்ளாட்சி தேர்தல்.? உயர்நீதிமன்ற தீர்ப்பை நிறுத்தி வைத்த உச்சநீதிமன்றம்.!

உபியில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்தலாம் என உத்திர பிரதேச உயர்நீதிமன்றம் அனுமதி அளித்து இருந்ததை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ள்ளது.   இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரான (OBC) இடஒதுக்கீடு இல்லாமல் உத்திர பிரதேசத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்தலாம் என அண்மையில் உத்திர பிரதேச உயர்நீதிமன்றம் அனுமதி அளித்து இருந்தது. அலகாபாத் உயர்நீதிமன்றம் அளித்த அனுமதிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. அந்த வழக்கு விசாரணை இன்று நடைபெற்ற போது, உயர்நீதிமன்ற உத்தரவை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்தது. … Read more

குஜராத் குற்றவியல் நடைமுறைச் சட்டத்திற்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல்.!

குஜராத் சட்டசபையில் நிறைவேற்ற பட்டிருந்த சிஆர்பிசி 144-வது சட்ட பிரிவுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.  தடையை மீறி போராட்டம் நடத்துபவர்கள் மீது கிரிமினல் வழக்குகளை பதிவு செய்ய காவல்துறையை அனுமதிக்கும் குற்றவியல் நடைமுறைச் சட்டபிரிவு சிஆர்பிசி 144 சில மாதங்களுக்கு முன்னர் குஜராத் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்ட மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் ஒப்புதல் தற்போது பெறப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சட்டப்பிரிவு 144 இன் கீழ் பிறப்பிக்கப்பட்ட தடை … Read more