ராஜஸ்தான் : 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து எரித்து கொன்ற கொடூரம்.!

Sexual Assault - Rajasthan

ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா மாவட்டத்தில் உள்ள நிரிசிங்புரா கிராமத்தில் 14 வயது சிறுமி நேற்று காலை தங்கள் வீட்டு கால்நடைகளை அருகில் மேய்ச்சலுக்கு கொண்டு சென்றுள்ளார். பின்னர் மதிய வேளையில் கால்நடைகள் வீட்டுக்கு வந்துவிட்டன.ஆனால் சிறுமி வீடு திரும்பவில்லை. இதனால் சிறுமி வீட்டை சேர்ந்தவர்கள் அக்கம் பக்கத்தில் தேட ஆரம்பித்துவிட்டனர். இறுதியில் அருகில் உள்ள நிலக்கரி உலை பகுதி அருகே எதோ எரிவது போல தெரிந்துள்ளது. அங்கே மனித உடல் எலும்பு இருந்துள்ளது. மேலும் சிறுமியின் வளையல், … Read more

தமிழகத்தில் முதல் பெண் ஜெனரல்.! முதல்வர் வாழ்த்து.. கனிமொழி எம்பி கேள்வி.! இந்திய ராணுவம் புதிய டிவீட்.!

Tamilnadu CM MK Stalin - Major General Ignatius Delos Flora

கன்னியகுமாரியை சேர்ந்த ராணுவ அதிகாரி இக்னேஷியஸ் டெலோஸ் புளோரா இந்திய ராணுவத்தில் மேஜர் ஜெனரலாக பதவி உயர்த்தப்பட்டார். தமிழகத்தில் இருந்து மேஜர் ஜெனரலாக பதவி உயர்வு பெற்ற முதல் பெண் ராணுவ அதிகாரி இக்னேஷியஸ் டெலோஸ் புளோரா ஆவார். இந்த செய்தியை இந்திய ராணுவத்தின் வடக்கு பகுதி கமாண்டர் பிரிவு தங்கள் டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து இருந்தனர். இந்த செய்தியை குறிப்பிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்து செய்தியை பதிவிட்டு இருந்தார். இதனை தொடர்ந்து, இந்திய … Read more

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து.. உச்சநீதிமன்றத்தில் இரண்டாவது நாளாக தொடர்ந்த வழக்கு விசாரணை.!

Superme Court of India - Jammu kashmir

கடந்த 2019 தேர்தல் முடிந்து 3 மாதத்தில் 20219, ஆகஸ்ட் 5ஆம் தேதி நாடளுமன்றத்தில் ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அதிகாரமான அரசியலமைப்பு சட்டம் 370ஐ ரத்து செய்து மத்திய அரசு மசோதாவை நிறைவேற்றியது . இதற்க்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புகளை பதிவு செய்தனர். மத்திய அரசு சட்டவிதி 370ஐ ரத்து செய்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கின் மீதான விசாரணை அவ்வப்போது நடைபெற்று வந்த நிலையில், தலைமை நீதிபதி சந்திரசூட் … Read more

Haryana Riots : பூஜைக்கான வாள்.. உரிமம் உள்ள துப்பாக்கிகள்.! இந்து அமைப்பை சேர்ந்த பஜிரங்கி தகவல்.!

Cow Guard Bittu Bajrangi

ஹரியானா மாநிலம் நுஹ் மாவட்டத்தில் கடந்த திங்கள் கிழமை விஸ்வ ஹிந்து பரிஷத் இந்து அமைப்பினர் நடத்திய யாத்திரையின் போது ஒரு பிரிவினர் அவர்களை தடுத்ததால் அங்கு இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட மோதலில் இரண்டு ஊர்காவல் படை காவலர்கள் உட்பட 5 பேர் உயிரிழந்னர். இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக ஹரியானா மாநிலம் மட்டுமின்றி டெல்லியிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த ஊர்வலத்தில் கலந்துகொண்ட விஸ்வ ஹிந்து பரிஷத் இந்து அமைப்பின் பசுக்காவலர் பிட்டு பஜ்ரங்கி … Read more

காணொலி காட்சி வாயிலாக திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.! அமைச்சர் துரைமுருகன் அறிவிப்பு.! 

Tamilnadu CM MK Stalin - DMK Meeting

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை மறுநாள் (ஆகஸ்ட் 5ஆம் தேதி) நடைபெறும் திமுக பொருளாளரும், தமிழக அமைச்சருமான துரைமுருகன் அறிவித்துள்ளார். இந்த ஆலோசனை கூட்டமானது காணொலி காட்சி வாயிலாக நடைபெறும் எனவும், திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறும் எனவும், கலைஞர் நூற்றாண்டு விழா பற்றி இந்த ஆலோசனை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக மாவட்ட செயலாளர்கள் 72 பேரும் கலந்துகொள்வார்கள் எனவும், இதில் கலைஞர் நூற்றாண்டு … Read more

ஹரியானா வன்முறை.. 2 மசூதிகள் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் பரபரப்பு.!

Petrol bombs hurled at 2 mosques - Haryana

ஹரியானா மாநிலம் நுஹ் மாவட்டத்தில் கடந்த திங்கள் கிழமை இந்து அமைப்பினர் நடத்திய ஊர்வலத்தில் இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட மோதலில் இரண்டு ஊர்காவல் படை காவலர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக ஹரியானா மாநிலம் மட்டுமின்றி டெல்லியிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று இரவு 11.30 மணியளவில், நுஹ் மாவட்டத்தில் உள்ள டாரு பகுதியில் உள்ள இரண்டு மசூதிகளில் மர்மநபர்கள் திடீரென பெட்ரோல் குண்டுகளை வீசினார். மோட்டார் சைக்கிளில் வந்த … Read more

சுதந்திரபோராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவுநாள்.. மலர்தூவி மரியாதை செலுத்திய இபிஎஸ்.!

Edappadi palanisamy tribute Dheeran chinnamalai

இன்று விடுதலை போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 218வது நினைவு தினம். இதனை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தீரன் சின்னமலைக்கு மரியாதை செலுத்தினார். இன்று சென்னை கிண்டியில் உள்ள தீரன் சின்னமலை சிலைக்கு எடப்பாடி பழனிச்சாமி மலர் தூவி மரியாதை செலுத்தினர். உடன், தமிழ்மகன் உசேன், ஜெயக்குமார் உள்ளிட்ட அதிமுக தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

ஐபிஎல் போன்று ஹாக்கி ஃபேன் பார்க்.! தமிழகத்தில் 40 இடங்களில் சிறப்பு ஏற்பாடு.!

Asian Hockey Champions trophy fans park

இந்தியா, சீனா, பாகிஸ்தான் , ஜப்பான், மலேசியா, தென் கொரியா உள்ளிட்ட 6 நாடுகள் பங்கேற்கும் ஆசிய ஆடவர் ஆக்கி போட்டி இன்று  (ஆகஸ்ட் 3) முதல் வரும் ஆகஸ்ட் 12ம் தேதி வரையில் சென்னையில் மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் நடைபெற உள்ளது. தினமும் 4, 6, 8.30 மணிக்கு என மொத்தம் 3 போட்டிகள் நடைபெற உள்ளன . இந்த போட்டியை காண அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச ஏற்பாடு செய்யப்படும் என விளையாட்டுத்துறை … Read more

நவராத்திரி துவக்கம்… உலகக்கோப்பை தொடரில் இந்தியா – பாகிஸ்தான் போட்டியில் மாற்றம்.?

INDvPAK worldcup 2023

இந்தாண்டு ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை இந்தியா நடத்துகிறது. இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பை தொடரானது அக்டோபர் 5 முதல் நவம்பர் 19 வரையில் நடைபெற உள்ளது. சென்னை, அகமதாபாத், டெல்லி உட்பட 10 மைதானங்களில் 45 லீக் போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியானது அக்டோபர் 15ஆம் தேதி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் போட்டி நடைபெறும் அறிவித்து இருந்த நிலையில், தற்போது அதன் தேதி மாற்றம் … Read more

டெல்லியில் காவேரி மேலாண்மை கூட்டம்… மேகதாதுவில் அணை கட்டும் பணி தீவிரம்…

Megathathu dam

காவிரி ஆற்றில் இருந்து தமிழகத்திற்கு போதிய அளவு தண்ணீரை கர்நாடக அரசு திறந்து விடாமல் இருக்கும் நிலையில், இரு மாநிலங்களுக்கு இடையான நதிநீர் பங்கீடு குறித்து ஆலோசிக்கும் காவிரி மேலாண்மை வாரியத்தின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடைபெற உள்ளது. இந்த கூட்டமானது வரும் 22ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் தமிழக அரசு, கர்நாடகா அரசு காவேரியில் இருந்து போதிய அளவு தண்ணீர் திறக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டி போதிய அளவு தண்ணீர் திறந்து விட வேண்டுமென … Read more