Asia Cup 2023 : சிக்ஸர் அடித்து 10,000 ரன்களை கடந்தார் கேப்டன் ரோஹித் சர்மா.! ஒருநாள் கிரிக்ட்டில் சாதனை.! 

Indian cricke team Captain Rohit sharma

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்று தற்போது நடைபெற்று வருகிறது.  இதில் கொழும்பு மைதானத்தில் நடைபெறும் இன்றைய ஆட்டத்தில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி, தசுன் ஷனக தலைமையிலான இலங்கை அணியை எதிர்கொண்டு விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் நல்ல தொடக்கத்தை அளித்து வருகின்றனர். இலங்கைக்கு எதிராக 50 … Read more

Kovai : கோவையில் பயங்கரம்.. நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு வெளியே வந்தவர்களுக்கு அரிவாள் வெட்டு.!

Murder

கோவையில் நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு வெளியே வந்த நபர்களை ஒரு கும்பல் அரிவாளால் வெட்டிய சம்பவம் அங்கு பெரும் பதற்றத்தை உண்டாக்கியுள்ளது. கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ரஞ்சித் , சைமன், ரித்தீஷ் ஆகிய 3 பெரும் ஒரு குற்றவழக்கில் சாட்சியம் அளிக்க வந்துள்ளனர். அவர்கள் நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்துவிட்டு திரும்பி செல்கையில், அவர்கள் சொந்த ஊரான ரத்னபுரி நோக்கி சென்று கொண்டு இருக்கையில், கோவை ராம் நகர் அருகே, இரண்டு இரு சக்கர வாகனத்தில் வந்த 6 பேர் … Read more

UEFA Euro : யூரோ தகுதி சுற்று – ரொனால்டோ இல்லாத போர்ச்சுகல்.. லக்சம்பர்க்கிற்கு எதிராக பிரமாண்ட வெற்றி.!

Portugal team Captain Cristiano Ronaldo

54 உலக நாடுகள் 9 பிரிவுகளாக பங்கேற்கும் UEFA யூரோ தகுதி சுற்று கால்பந்து போட்டிகள் வருட மார்ச் மாதத்தில் இருந்து நடைபெற்று வருகிறது. இதில் J பிரிவில் உள்ள கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுகல் அணியும், லாரன்ட் ஜான்ஸ் தலைமையிலான லக்சம்பர்க் அணியும் மோதுகின்றன. இந்திய நேரப்படி இன்று மதியம் 12.30 மணிக்கு தொடங்கியது. இதுவரை 5 போட்டிகளில் விளையாடி 5இல் வெற்றியை பெற்று முதலிடத்தில் உள்ளது போர்ச்சுகல் அணி. இன்று விளையாடிய போட்டியிலும் 9-0 … Read more

SanatanaDharma : சனாதன சர்ச்சை… திமுக பேசுவதற்கு சோனியா, ராகுல்காந்தியே காரணம்.! பாஜக தலைவர் ஜே.பி.நட்டா விமர்சனம்.!

BJP Leader JP Nadda - Congress Leaders Rahul gandhi - Sonia Gandhi

கடந்த வாரம் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் நடைபெற்ற சனாதான ஒழிப்பு மாநாடு நிகழ்ச்சிகளில் பங்கேற்று பேசுகையில், டெங்கு, கொரோனா போல சனாதானத்தையும் ஒழிக்க வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியிருந்தார். இதற்கு பாஜக மற்றும் அதன் ஆதாரவு அமைப்புகள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வந்தன. அதேபோல அமைச்சர் உதயநிதி கருத்திருக்கு தமிழகத்தில் பல்வேறு கட்சியினர் ஆதரவும் தெரிவித்து வந்தனர். கர்நாடகா அமைச்சரும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மகனுமான பிரியங்க் கார்கே … Read more

SanatanaDharma : சனாதனத்தை எதிர்த்தால் நாக்கை பிடுங்குவோம்.! மத்திய அமைச்சர் ஆவேசம்.!

Union Minister Gajendra singh shekhawat - TN Minister Udhayanidhi stalin

கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் சென்னையில் நடைபெற்ற சனாதான ஒழிப்பு மாநாடு நிகழ்ச்சிகளில் பங்கேற்று பேசுகையில் டெங்கு, கொரோனா போல சனாதனமும் ஒழிக்கப்பட வேண்டும் என பேசியிருந்தார். அமைச்சர் உதயநித்திஷ் ஸ்டாலின் பேச்சுக்கு பாஜகவினர் மட்டுமின்றி சில வலதுர்சாரி அமைப்புகளும் தங்கள் கண்டங்களை கூறியிருந்தனர். மேலும் உத்திர பிரததேசத்தில் ஒரு சாமியார் பேசுகையில், உதயநிதி ஸ்டாலின் தலையை கொண்டு வருபவர்களுக்கு 10 கோடி ரூபாய் அளிக்கப்படும் என சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். இந்த … Read more

Madras Eye : சென்னையில் வேகமாய் பரவும் ‘மெட்ராஸ் – ஐ’.! தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்.! அமைச்சர் மா.சுப்ரமணியன் பேட்டி.! 

Minister Ma Subramaian says about Madras Eye

வானிலை காலநிலைக்கேற்ப அந்தந்த நேரத்தில் சில நோய்கள் வருவதும், அதனை தடுக்க அரசு சுகாதர நடவடிக்கைகளை மேற்கொள்வதும் வழக்கமான ஒன்று தான். தற்போது மழைக்காலம் துவங்க உள்ளதால் ஏற்கனவே அதனை ஒட்டி வரும் காய்ச்சல் , சளி, இருமல் போன்ற நோய்களை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நேரத்தில் தற்போது சென்னையில் ‘மெட்ராஸ்-ஐ’ எனப்படும் கண்வலி நோய் பரவ ஆரம்பித்துள்ளது . அதனை தடுக்கும் நடவடிக்கைகள் அரசு தீவிரமாக ஈடுபட்டு … Read more

Cauvery Issue : தமிழக அரசு தேவையில்லாமல் தொல்லை தருகிறது.! கர்நாடக முதல்வர் சித்தராமையா கருத்து.! 

Karnataka CM Siddaramaiah

காவிரி நதியிலிருந்து கர்நாடக அரசு தமிழகத்திற்கு குறிப்பிட்ட அளவு தண்ணீர் திறந்து விட வேண்டுமென்று காவிரி மேலாண்மை வாரியம் கூறியும் உரிய அளவு தண்ணீரை கடந்த சில மாதங்களாக கர்நாடக அரசு திறந்து விடவில்லை. மழை வரத்து குறைவாக இருப்பதன் காரணமாக தண்ணீர் திறந்து விடவில்லை என கர்நாடக அரசு தொடர்ந்து விளக்கம் கூறிவந்தது. இதனை அடுத்து அண்மையில் காவிரி ஒழுங்காற்று வாரிய ஆலோசனை கூட்டமும், காவிரி மேலாண்மை வாரிய ஆலோசனை கூட்டமும் அடுத்தடுத்த நாட்கள் டெல்லியில் … Read more

Asia Cup 2023 : தொடர்ந்து 3வது நாளாக களம் காணும் இந்தியா.! இலங்கையுடன் இன்று பலப்பரீட்சை.!

Sri Lanka Cricket Team Captain Dasun Shanaka - Indian cricket team captain Rohit sharma

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடைபெற்று வருகிறது. 6 அணிகள் கொண்டு லீக் சுற்றுடன் கடந்த மாதம் 30 ஆம் தேதி துவங்கிய இந்த தொடர் தற்போது இறுதி போட்டியை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. தற்போது சூப்பர் 4 சுற்று போட்டியானது இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. இதில் இன்றைய ஆட்டத்தில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணியும் மோத … Read more

SanatanaDharma : திருமாவளவன் , ஆ.ராசா பேசாதத்தையா நான் பேசிவிட்டேன்.! அமைச்சர் உதயநிதி பேச்சு.!

Tamilnadu Minister Udhayanidhi stalin

தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த வாரம் ஒரு விழாவில் சனாதனம் பற்றி பேசியது பெரும் சர்ச்சையாக மாறியது. அவர் மீதான எதிர்ப்புகள், விமர்சனங்கள், காவல்துறை புகார்கள் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான் கடந்த வாரம் முழுக்க அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக இருந்தார். இது குறித்து பல்வேறு மேடைகளில், பேட்டிகளில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். தான் கூறிய சனாதன ஒழிப்பு பற்றி எந்த வித பின்வாங்கலும் இல்லாமல் அந்த கருத்தில் அமைச்சர் … Read more

Ambur : பட்டியலின பெண் ஊராட்சி மன்ற தலைவியை காணவில்லை.? கணவர் பரபரப்பு புகார்.!

Nayakaneri Panchayat Council Chairperson Indhumathi

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா நாயக்கனேரி ஊராட்சி மன்ற தலைவியாக கடந்த ஊராட்சி மன்ற தேர்தலில் இந்துமதி என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் பட்டியல் இனத்தை சேர்ந்தவர் என்பதாலும், அந்த ஊராட்சி மன்ற தொகுதி பட்டியல் இனத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகுதி என்பதாலும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார் இந்துமதி. இதனை அடுத்து மாற்றுசமூகத்தினர் பட்டியல் இனத்தை சேர்ந்தவர் ஊராட்சி மன்ற தலைவராக இருக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்து வந்ததாக தெரிகிறது. இதனால் இந்துமதியை ஊருக்குள் வரக்கூடாது என கூறி அவர்களை … Read more