'குடி'மகன்களின் பிடியில் இருந்து மதுபானங்களை பாதுகாக்க திருச்சி மாநகராட்சி புதிய வியூகம்… காவல்துறை பாதுகாப்புடன் அசத்தல்…

கொரோனா தொற்றை தடுக்க இந்தியா முழுதும் 21 நாட்கள் லாக்-டவுன்எனப்படும் ஊரடங்கு உத்தரவு  நடைமுறையில் இருக்கிறது. இந்நிலையில்  இந்த ஊரடங்கு  மதுப்பழக்கத்துக்கு அடிமையானவர்களுக்கு பெரிய தலைவலியை சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து திருச்சியில் சில தினங்களுக்கு முன்பாக 2  கடைகளின் கதவு கடைகள் உடைக்கப்பட்டு மதுபாட்டில்கள் திருடப்பட்டன. இதனையடுத்து மதுபாட்டில்களை மதுப்பிரியர்களிடமிருந்து  பாதுகாக்க திருச்சி  மாநகராட்சி சார்பில் புதிய முறையை கையாண்டுள்ளது. அதாவது, அனைத்து மதுபாட்டில்களையும் ஒரே இடத்துக்கு மாற்றி அங்கு காவலர்கள் மூலம் பலத்த  பாதுகாப்பு போட … Read more

வரலாற்றில் இன்று(03.04.2020)… மராட்டிய பேரரசர் சிவாஜி மறைந்த தினம் இன்று…

இந்தியாவில் சத்திரபதி சிவாஜி மகாராஜ் என்று இந்திய மக்களால் அறியப்படும் சிவாஜி ராஜே போஸ்லே மராட்டியப் பேரரசின் ஆட்சிக்கு வித்திட்டவர் ஆவர். இவர்,  சாஹாஜி போஸ்லே மற்றும் ஜிஜாபாயின் இரண்டு புதல்வர்களில், சிவாஜி இளைய மகனாவார். பிஜாப்பூர் சுல்தானியம், டெக்கான் சுல்தானியர்கள் மற்றும் மொகாலியர்களுக்கு எதிராக பல்வேறு காலங்களில் இராணுவ சேவைகளை அளித்த இவரது தந்தை சாஹாஜி, ஒரு மராட்டிய படை தளபதியாக விளங்கியவர். ஹிந்தவி சுயராஜ்ஜியத்தின் (இந்திய சுயாட்சி) சித்தாந்தத்திற்கு ஆதரவளித்த சிவாஜி ராஜே போஸ்லே, … Read more

கொரோனாவால் உலகமே தவித்து வரும் நிலையில் இலங்கைக்கு 2000 கோடி மதிப்புள்ள போதை பொருளை கடத்திய பாகிஸ்தான் பங்காளிகள்…

நம் அண்டை நாடான இலங்கையில் விடுதலைபுலிகளுக்கும் இலங்கை ராணுவத்துக்குமான உள்நாட்டு போர் முடிவுக்கு வந்த பின்னர், அங்கு  போதைப் பொருட்களின் புழக்கமும், பயன்பாடும், கடத்தப்படுவதும்  அதிகரித்துள்ளது.  இலங்கையில் தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும்  வடக்கு பகுதியில்  போதைப்பொருள் விற்பனை அதிகம் என்றும்,  இந்தியாவிலிருந்து கடல் வழியாக இலங்கையின் வடக்கு  மாகாணத்துக்கு கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்தப்படுகின்றன என்று குற்றம் சாட்டப்படுகிறது. ஆனால், தற்போது  இலங்கை வரலாற்றிலேயே  முதல்முறையாக கடல்வழியாக இலங்கைக்கு கப்பலில் கடத்தப்பட்ட ரூ.2 ஆயிரம் கோடி … Read more

வரலாற்றில் இன்று(01.04.2020)… ஸ்ரீ ராமசந்திர மூர்த்தி அவதரித்த தினம் இன்று…

ஸ்ரீராமபிரான் எதற்காக நவமி திதியில் பிறந்தார் என்ற கதை நம்மில் பலருக்கு தெரியுமா? என்றால் அது சந்தேகம்.  பொதுவாக அஷ்டமி திதி அன்றும், நவமி திதி அன்றும் எந்த ஒரு நல்ல காரியத்தையும் செய்ய மாட்டார்கள். இதனால் வருத்தப்பட்ட அஷ்டமியும், நவமியும் ஒருநாள் மிகவும் வருத்தப்பட்டு மகாவிஷ்ணுவிடம் சென்று முறையிட்டார்கள். எங்கள் இருவரையும் ஒதுக்கி வைத்துள்ளார்கள். இதனால் எங்களுக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது என்றபடி தங்களது கஷ்டத்தை விஷ்ணு பகவானிடம் நவமி, அஷ்டமி திதிகளும் முறையிட்டுள்ளது. கஷ்டத்தோடு … Read more

மனிதன் எப்படி வாழ வேண்டும் என எடுத்துக்கூறிய ஸ்ரீராம சந்திர மூர்த்தி அவதரித்த தினமான ராம நவமி குறித்த தொகுப்பு…

அயோத்தி மாநகரை  ஆண்ட மன்னர்  தசரத சக்கரவர்த்தி. இவருக்கு கோசலை, சுமித்திரை, கைகேயி என்ற மூன்று மனைவிகள் இருந்தார்கள். ஆனால் நாடாளும் சக்கரவர்த்திக்கு  ஒரு பெரிய குரை இருந்து வந்தது. அதாவது மன்னர் தசரத சக்கரவர்த்திக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை. எனவே  தசரத சக்கரவர்த்தியின் குலகுருவான வசிஷ்ட முனிவரிடம் சென்று, குழந்தை பாக்கியம் பெற என்ன செய்யலாம் என்ற ஆலோசனையை பெற்ற தசரத சக்கரவர்த்தி முனிவர் சொன்ன ஆலோசனை படி தன்னுடைய அரண்மனையில் ‘புத்ர காமேஷ்டி’ என்ற … Read more

கொரோனா நிதியுதவி…. ஹீரோ நிறுவனம் 100 கோடி ரூபாய் நிதியுதவி என அறிவிப்பு…

கொரோனா வைரஸ் அகில  உலகையும் அதிகமாகவே  பாதித்து வருகிறது. இந்நிலையில், கொரோனோ தடுப்பு நடவடிக்கைக்காக நிதியுதவி அளிக்க வேண்டும் என பிரதமர் மோடி நாட்டுமக்களை கேட்டுக்கொண்டார். இதனால்  பெரும்பாலான நிறுவனங்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றன. அந்த வரிசையில் தற்போது  ஹீரோ  வாகன நிறுவனம்  ரூ. 100 கோடி நிதியுதவி அளிப்பதாக  அறிவித்துள்ளது. இதில் ரூ. 50 கோடி ரூபாய் பிரதமர் நிவாரண நிதிக்கும்,  மீதமுள்ள ரூ. 50 கோடி ரூபாய் மற்ற … Read more

கொரோனாவை தடுக்க திருப்பூரில் புதிய்ய முயற்சி… காய்கறி சந்தையில் கிருமி நாசினி சுரங்கம் அமைத்து அசத்தல்…

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1500ஐ தாண்டியுள்ளது. இதில் பலியானோர் எண்ணிக்கையும்  50ஐ தொட உள்ளது.இந்நிலையில்,  இந்த நோய் பரவலைத் தடுக்க இந்தியா முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன்படி இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் பொதுமக்களுக்காக, ஆங்காங்கே கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக கிருமி நாசினி கொடுத்து மக்களை கைக்கழுவுதலின் அவசியத்தை விளக்குகின்றனர்.  இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் … Read more

கொரோனா விவகாரம்… அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை…

இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மக்கள் அனைவரும் வீடுகளில் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். இந்நிலையில் கொரோனாவின் தாக்கம் குறையாத நிலையில்,  கொரோனா பாதிப்புகள் குறித்தும் அதன் கட்டுப்படுத்தும் நடவடிக்கை குறித்தும் அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பாரத பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். இது தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுடன் பாரத பிரதமர் மோடி நாளை ஆலோசனை நடத்த உள்ளதாக தற்போது தகவல்கள்  வெளியாகியுள்ளது. … Read more

கொரோனோ தொற்றின் காரணமாக ராஜ்பவனை பார்வையிட தடை…. முன்பதிவு செய்தவர்கள் வேறு ஒரு நாளில் பார்வையிடலாம் என அறிவிப்பு…

மகாராஷ்ட்ரா மாநிலம் மும்பையில் உள்ள  மலபார் ஹில் என்ர பகுதியில்  ராஜ் பவன் உள்ளது. இதன் அழகை கண்டு ரசிக்க தினமும் காலை நேரத்தில் பொது மக்கள் பார்வையிட அனுமதி வழங்கப்படும். ஆனால் தற்போது கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக ஏற்கனவே மார்ச் மாதம்  31-ஆம் தேதி வரை பொது மக்கள் ராஜ் பவனை பார்வையிட அனுமதி ரத்து செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில் தற்போது கொரோனோ வைரஸ் தொற்றின் தீவிரம் குறையாத நிலையில் இந்த மாதம் (ஏப்ரல்) … Read more

பொதுத்துறை வங்கிகள் இணைப்பு இன்று முதல் நடைமுறைக்கு வந்தது…

இந்தியாவின்  10 பொதுத்துறை வங்கிகளின் எண்ணிக்கையை குறைக்கும் வகையில், வங்கிகள் இணைப்பை மத்திய அரசு தற்போது  மேற்கொண்டு வருகிறது. கடந்த ஆண்டு, விஜயா வங்கி, தேனா வங்கி ஆகியவை பேங்க் ஆப் பரோடாவுடன் இணைக்கப்பட்டன. இந்நிலையில், 2வது ஒருங்கிணைப்பாக 10 பொதுத்துறை வங்கிகள் 4 பெரிய வங்கிகளுடன் இன்று இணைக்கப்படுகின்றன. நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளபோதும்,  திட்டமிட்டபடி வங்கிகள் ஒருங்கிணைப்பு இன்று அமலுக்கு வருகிறது. அதன்படி, இந்தியன் வங்கியுடன் அலகாபாத் வங்கி இன்று இணைகிறது. இனிமேல், … Read more