மனிதன் எப்படி வாழ வேண்டும் என எடுத்துக்கூறிய ஸ்ரீராம சந்திர மூர்த்தி அவதரித்த தினமான ராம நவமி குறித்த தொகுப்பு…

அயோத்தி மாநகரை  ஆண்ட மன்னர்  தசரத சக்கரவர்த்தி. இவருக்கு கோசலை, சுமித்திரை, கைகேயி என்ற மூன்று மனைவிகள் இருந்தார்கள். ஆனால் நாடாளும் சக்கரவர்த்திக்கு  ஒரு பெரிய குரை இருந்து வந்தது. அதாவது மன்னர் தசரத சக்கரவர்த்திக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை. எனவே  தசரத சக்கரவர்த்தியின் குலகுருவான வசிஷ்ட முனிவரிடம் சென்று, குழந்தை பாக்கியம் பெற என்ன செய்யலாம் என்ற ஆலோசனையை பெற்ற தசரத சக்கரவர்த்தி
முனிவர் சொன்ன ஆலோசனை படி தன்னுடைய அரண்மனையில் ‘புத்ர காமேஷ்டி’ என்ற யாகத்தை நடத்த முடிவு செய்தார். யாகம் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில், யாகத் தீயிலிருந்து யக்னேஸ்வரர் தோன்றி, பாயாசம் நிறைந்த ஒரு பாத்திரத்தை  தசரத சக்கரவர்த்தியின் கையில் கொடுத்தார். அந்த பாத்திரத்தில் இருக்கும் பாயாசத்தை மன்னரின் மனைவிகள் அருந்த வேண்டும் என்ற கட்டளையையும் வைத்தார் யக்னேஸ்வரர். மனைவிகள் மூவரும் பாயாசத்தை அருந்தினார்கள். அதன்பின்பு பங்குனி மாதம் நவமி தினத்தில் கோசலைக்கு ஒரு ஆண் குழந்தை பிரந்தது. அந்த ஆண் குழந்தை தான்  ராமபிரான். அதேபோல் கைகேயிக்கு பரதனும், சுமித்திரைக்கு லட்சுமணனும், சத்ருக்கனனும் மகனாக பிறந்தார்கள். ராமபிரான் பிறந்த இந்த தினத்தை அனைவரும் இராம நவமி என்று அனைவரும் கொண்டாடி மகிழ்கிறோம்..

author avatar
Kaliraj