தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணியில் உருவாக இருக்கும் ‘அசுரன்’ படத்தில் கதாநாயகி இவரா?!!

பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை படங்களின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணி இணைந்துள்ளது. இந்த படத்தை கலைப்புலி.எஸ்.தாணு தனது வி கிரியேஷன் சார்பில் தயாரிக்க உள்ளார். இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்க உள்ளார்.

பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை படங்களுக்கு பிறகு ஜி.வி.பிரகாஷ் மீண்டும் வெற்றிமாறன் படத்திற்கு இசையமைக்க ஒப்பந்தமானது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படம் ஜி.வி.பிரகாஷிற்கு 71வது திரைப்படம் ஆகும்.

இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக தற்போது மலையாள நடிகை மஞ்சு வாரியர் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த தகவலை தற்போது படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

DINASUVADU

 

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment