, , ,

விபத்தில் பலியான ராணுவ வீரர் – சொந்த ஊரில் அடக்கம்!

By

தேனி மாவட்டத்தை சேர்ந்த இராணுவ வீரர் வாகன விபத்தில் உயிரிழந்ததை அடுத்து அவரது சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே குச்சனூர் பேரூராட்சியில் உள்ள துரைசாமி புறத்தை சேர்ந்தவர் தான் இராணு வீரர் அழகு ராஜா. இவர் ஒடிஷா மாநிலத்தில் வாகன ஓட்டுநராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், சீனாவிஜ் எல்லையில் அமைந்துள்ள லடாக் ராணுவ தளவாடங்களை ஏற்றி சென்ற போது ஏற்பட்ட விபத்தில் அழகு ராஜ் உயிரிழந்துள்ளார். அங்கிருந்து கொண்டுவரப்பட்ட அவர் ராணுவ மரியாதையுடன் அவரது சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Dinasuvadu Media @2023