#வர்த்தகம் கிடையாது – ஒப்பந்தம் ரத்து! சிக்கலில் சீனா!

#வர்த்தகம் கிடையாது – ஒப்பந்தம் ரத்து! சிக்கலில் சீனா!

அமெரிக்கா -சீனா இடையிலான உறவு மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளதால், அந்நாட்டோடு இனி  இரண்டாம் கட்ட வர்த்தக ஒப்பந்தத்துக்கு வாய்ப்பு முற்றிலும் நசிந்து விட்டது என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அதிரடியாக தெரிவிது உள்ளார்.

அமெரிக்கா மற்றும் சீனா இடையில் இந்த ஆண்டு துவக்கத்தில் நடந்த சுமுக பேச்சு வார்த்தையை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே, மாபெரும் வர்த்தக ஒப்பந்தம்ஆனது கையெழுத்தானது.

இதன் தொடர்ச்சியாகவே 2ம் கட்ட ஒப்பந்தமும் விரைவில் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்பட்டநிலையில் தான் சீனாவில் கொரோனா தொற்றுபரவ ஆரம்பித்தது.

 

உலகம் முழுதும் பரவிய இத்தொற்று பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றது. மேலும்  இவ்விவகாரத்தை சீனா சரியாக கையாள வில்லை என்று  அமெரிக்கா அதன் மீது குற்றம்சாட்டியது.

 

இந்நிலையில் தான் அமெரிக்க அதிபர்  டொனால்டு டிரம்ப் இது குறித்து  கூறியதாவது:கொரோனா தொற்று, உலகம் முழுதுமே பரவாமல் அதனை சீனா  தடுத்து நிறுத்தி இருக்க முடியும்.ஆனால், அதை அவர்கள் செய்யவில்லை.

 

மாறாக வூஹான் நகரில் இருந்து, சீனாவின் மற்ற பகுதிகளுக்கு பரவாமல் தடுப்பதில் மட்டுமே கவனம் செலுத்தினர். இந்நிலையில் அமெரிக்கா – சீனா இடையிலான உறவு மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. அதனால்  அவர்களுடன் இனி 2ம்-கட்ட வர்த்தக ஒப்பந்தம்  இப்போதைக்கு வாய்ப்பே கிடையாது என்று ட்ரம்ப் கூறினார்.இவருடைய இந்த அறிவிப்பால் சீனாவின் பொருளாதாரத்தில் மேலும் ஒரு அடி விழுந்துள்ளதாகவும் மிகப்பெரிய ஒப்பந்தமானது கை நழுவி சென்றுவிட்டதாக தகவல்கள் வெளியாகின்றது.இது சீனாவிற்கு பெருத்த பொருளாதார சேதம் என்று கணிக்கின்றனர்.

 

author avatar
kavitha
Join our channel google news Youtube