தொல்லியல் முதுநிலை பட்டயப் படிப்பு மாணவர் சேர்க்கை.., பயிலுதவி தொகை ரூ.5,000 – தமிழக அரசு அறிவிப்பு!

தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வழங்கும் இரண்டாண்டு முழுநேர தொல்லியல் முதுநிலைப் பட்டயப் படிப்பிற்கு விண்ணப்பம் வரவேற்பு.

2021-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் திங்கள்கிழமை முதல் தொடங்க உள்ள இரண்டு ஆண்டு காலை முழுநேர தொல்லியியல் முதுநிலை பட்டாய படிப்பிற்கு (Post Graduate Diploma in Archaeology) 2021-23 ஆம் கல்வி ஆண்டின் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கல்வித்தகுதி: முதுநிலை, முதுநிலை அறிவியல், முதுநிலை பொறியியல் பாடங்களில் ஏதேனும் ஒன்றில் குறைந்தது 55% மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும் என்றும் மொத்தம் இடம் – 20, பயிற்று மொழி – தமிழ் மற்றும் ஆங்கிலம் எனவும் தெரிவித்துள்ளனர்.

பயிலுதவித் தொகை: ஒவ்வொரு மாணவருக்கும் மாதம் ரூ.5,000 வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பதாரர் பெயர். முகவரி, தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி, கல்வித்தகுதி, இனம் மற்றும் நிழற்படம் ஆகிய விவரங்களுடன் விண்ணப்பத்தினை நிறைவு செய்து கல்விச்சான்றிதல்கள் மற்றும் சாதி சான்றிதழ் ஆகிய நகலுடன் இணைத்து அனுப்பி வைக்கவேண்டும்.

தேர்ந்தெடுக்கும் முறை: விண்ணப்பிக்கும் மாணவர்கள் கொள்குறி எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முக தேர்வு வாயிலாக தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பதாரர்கள் www.tnarch.gov.in என்ற தொல்லியல் துறை இணையதளத்தின் மூலமாக விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யலாம். இதனை கிளிக் செய்து  https://www.tnarch.gov.in/sites/default/files/Application%20Form_1.pdf விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: ஆணையர் (மு.கூ.பொ), தொல்லியல் துறை, தமிழ் வளர்ச்சி வளாகம், தமிழ் சாலை, எழும்பூர், சென்னை-600008. தொலைபேசி எண் 044-28190020, மின்னஞ்சல் முகவரி[email protected] விண்ணப்பம் வந்து சேர வேண்டிய கடைசி நாள் வரும் 16ம் தேதி மாலை 5 மணி வரை என்று அறிவிக்கப்பட்டள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்